பதிவு செய்த நாள்
15
ஜூலை
2025
03:07
விசாகம் 4 ம் பாதம் : மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி சங்கடத்திற்கு ஆளானாலும் பிறருக்கு வழிகாட்டியாக வாழும் உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். நட்சத்திராதிபதி குரு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செயல்களில் தடுமாற்றம், குழப்பம் ஏற்படலாம். பின்விளைவுகள் பற்றி யோசிக்காமல் செயல்பட்டு நெருக்கடிக்கு ஆளாக நேரிடும். குருவின் பார்வைகள் 12, 2, 4 ம் இடங்களுக்கு உண்டாவதால் விரய செலவு கட்டுப்படும். வீண் அலைச்சல் குறையும். உறக்கமின்றி தவித்தவர்களுக்கு நிம்மதியான துாக்கம் வரும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். பணவரவு சீராகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவிற்கு குருபார்வை உண்டாவதால் இதுவரை இருந்த போராட்டங்கள் முடிவிற்கு வரும். தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். ராசிநாதன் செவ்வாய் ஜூலை 30 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். தடைபட்ட வேலைகள் நடைபெற ஆரம்பிக்கும். கணவன், மனைவிக்குள் இருந்த பிரச்னைகள் போராட்டங்கள் இருந்த இடம் தெரியாமல் போகும். சிலருக்கு சொத்து சேரும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். பணியில் இருந்த நெருக்கடி விலகும். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். வேலையில் உயர்வு உண்டாகும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். விவசாயிகளுக்கு நன்மையான மாதமாக இருக்கும். குலதெய்வ வழிபாட்டால் பகை விலகும்.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 18, 21, 27, 30. ஆக. 3, 9, 12
பரிகாரம்: திருச்செந்துார் முருகனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
அனுஷம்: நினைத்ததை சாதிக்கும் வலிமை கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆடி மாதம் யோகமான மாதமாகும். அர்த்தாஷ்டம சனியாக சஞ்சரித்து வந்த உங்கள் நட்சத்திராதிபதி வக்கிரம் அடைந்திருப்பதால் நெருக்கடிகள் விலகும். மனதில் நிம்மதி உண்டாகும். கடந்த மாதம் வரை இருந்த போராட்ட நிலை மாறும். பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைக்கும். கோயில்களுக்கு சென்று வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். சிலர் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வர். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். ஜூலை 30 முதல் ராசி நாதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த பணம் வரும். பொருளாதார நிலையும் செல்வாக்கும் உயரும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் பிரச்னைகள் முடிவிற்கு வரும். ஜூலை 26 முதல் சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்திற்கு செல்வதால் நன்மை அதிகரிக்கும். எதிர்பாலினரால் ஏற்பட்ட தொல்லை விலகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். ஜீவன ஸ்தானத்தில் தொடர்ந்து கேது சஞ்சரித்து வருவதால் தொழிலில் கூடுதலாக அக்கறை செலுத்துவது நல்லது. பணியாளர்கள் ஆசைகளுக்கு இடம் கொடுக்காமல், சட்டத்திற்கு புறம்பாக செயல்படாமல் இருப்பது மிக அவசியம். இல்லையெனில் நெருக்கடி, சட்ட சிக்கல்களுக்கு ஆளாகலாம். மாதத்தின் பிற்பகுதியில் சிலருக்கு சொத்து சேரும். பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். வேலை பார்க்கும் இடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். விவசாயிகள் சிந்தித்து செயல்படுவது அவசியம்.
சந்திராஷ்டமம்: ஜூலை 22, 23.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 17, 18, 26, 27. ஆக. 8, 9.
பரிகாரம்: தர்பாரண்யேஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும்.
கேட்டை: வேகம் விவேகத்தால் வாழ்க்கையில் வெற்றி பெறும் உங்களுக்கு, ஆடி நன்மையான மாதமாகும். கடந்த மாதத்தில் இருந்த நெருக்கடி விலகும். உங்கள் புத்தி சாதுரியமும் திறமையும் வெளிப்படும். உடல் பாதிப்பு நீங்கும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் முடிவிற்கு வரும். தொழில் மீதான அக்கறை அதிகரிக்கும். ஜூலை 25 முதல் புதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். சிலர் புதிய இடம் வாங்குவீர்கள். தொழிலை விருத்தி செய்வதற்காக எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். விரய செலவுகளால் அவதிப்பட்டு வந்த நிலையில் மாற்றம் ஏற்படும். ஜூலை 26 வரை எதிர்பாலினரால் கவனம் சிதறும். அதன் பிறகு நன்மை அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். பிள்ளைகளின் மீதான அக்கறை அதிகரிக்கும். வருமானத்தை நோக்கி உங்கள் கவனம் செல்லும். ஜூலை 30 முதல் தடைபட்ட வேலைகள் நடந்தேறும். வியாபாரம், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். நண்பர்களால் ஆதாயம் கூடும். அரசு வழியில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வெளிநாட்டு தொடர்புகள் ஆதாயம் தரும். வேலைக்காக வெளிநாடு செல்வதற்கு மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். விவசாயிகளுக்கு இந்த மாதம் நன்மையான மாதம். சிறு வியாபாரிகளுக்கு ஆதாயம் கூடும். உழைப்பாளர்கள் போற்றப்படுவர். மாதத்தின் பிற்பகுதியில் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். தம்பதிகளுக்குள் இணக்கம் உண்டாகும்.
சந்திராஷ்டமம்: ஜூலை. 23, 24
அதிர்ஷ்ட நாள்: ஜூலை. 18, 27. ஆக. 5, 9, 14
பரிகாரம்: லட்சுமி நாராயணரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.