இந்து சமய அறநிலையங்கள் துறையின் கீழ் உள்ள புகழ்பெற்ற அம்மன் திருக்கோவில்களுக்கு, ஆடி மாதத்தில், ஆன்மிக அன்பர்கள், அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவர் என, அமைச்சர் சேகர்பாபு, சட்டசபையில் அறிவித்தார். இதன்படி, ஆடி வெள்ளிக்கிழமைகளில், கோவை மாவட்டத்தில், 18ம் தேதி (இன்று), 25ம் தேதி, ஆக., 1, 8 மற்றும் 15ம் தேதிகளில், ஆன்மிக அன்பர்களை, கோவை தண்டு மாரியம்மன் கோவில், பொள்ளாச்சியில் அருள்மிகு மாரியம்மன் அங்காளம்மன் கோவில், ஆனைமலை மாசாணியம்மன் கோவில், சூலக்கல் மாரியம்மன் கோவில் ஆகிய புகழ்பெற்ற அம்மன் திருக்கோவில்களுக்கு, ஆன்மிக சுற்றுலாப் பயணம், இந்து சமய அறநிலைத்துறை மற்றும் சுற்றுலாத் துறையுடன் இணைந்து நடத்தப்படுகிறது. இதில், 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இலவசமாக அழைத்து செல்லப்பட உள்ளனர். ஆடி மாதத்தில் அம்மன் திருக்கோயில்களுக்கு மூத்த குடிமக்களை கட்டணமின்றி அழைத்துச் செல்லும் வகையில் முதற்கட்ட ஆன்மிக பயணத்தை சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.