பதிவு செய்த நாள்
24
ஜூலை
2025
01:07
சென்னைக்கு அருகில் 23 கி.மீ., தொலைவில் ஓ.எம்.ஆர்., சாலை காரப்பாக்கம், சென்னை மாநகராட்சி 198 வது வார்டில் அமைந்துள்ளது வேண்டவராசி அம்மன் கோவில். 300 ஆண்டுகள் பழமையான கோவிலாகும். முன்னோர்கள் வழிபட்ட கோவிலாகும். அடர்ந்த மரங்கள் நிறைந்த வனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் கிராம தேவதை ஸ்ரீ வேண்டவராசி அம்மன்.
காரப்பாக்கம் தென் கோடியில் அமைந்துள்ள வேண்டியவர்க்கு வேண்டிய வரம் தரும் வேண்டவராசி அம்மனுக்கு ஆன்மிக தொண்டு செய்யும் பக்தர் மாமன்ற உறுப்பினர் லியோ என்.சுந்தரம் அவர்களின் முயற்சியாலும் மற்றும் கிராம பொதுமக்களின் பங்களிப்புடனும் புதிய கோவில் சோழர்கள் கட்டக் கலை அம்சத்துடனும், கருங்கள் சிற்ப வேலைப் பாடுடன் விமானம், கருவறை மண்டபம், ராஜகோபுரத்துடன் கூடிய மண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது. இத்திருத் தலத்திற்கு உபயதாரர்கள் வரவேற்கப்படு கின்றனர். இங்கு நடைபெறும் ஆடி திருவிழா 5 நாட்கள் பூங்கரகம், கூழ்வார்த்தல், வேப்பஞ்சாலை செலுத்துதல், ஊரணி பொங்கல் வைப்பது சிறப்பு தைப்பூசம், சித்ரா பவுர்ணமி பால்குட அபிஷேகம் ஊரணி பொங்கல் வைத்தல், அமாவாசை பூஜை சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
திருமண தடை நீங்கவும், குழந்தை இல்லாத தம்பதியருக்கு புத்திரபாக்கியம் கிடைக்கவும், வேலை கிடைக்கவும் பொங்கல் வைத்து நெஞ்சுருக வணங்கி செல்கின்றனர். அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வணங்கி செல்கின்றனர். அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வணங்குவதால் வேண்டுதல் நிறைவேறுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
வேண்டவராசி அம்மன் திருக்கோவில்,
ஓ.எம்.ஆர்., சாலை, வேண்டவராசி அம்மன் கோவில் தெரு,
காரப்பாக்கம், சென்னை - 600 097.
கோவில் திறக்கும் நேரம்: காலை 7.00 – 12.00 மணி மாலை 5.00 – 8.30 மணி வரை
தொடர்புக்கு: 98408 76986, 954 16 57158