ஆதிபராசக்தியை ஆடி மாதத்தில் வணங்கி நாம் பெற வேண்டிய அம்பிகையின் திருநாமங்கள் கூறி நலம் பெறுவோம். ஆதிபராசக்தியை ஒருவளாகவும், பல அவதாரங்களுடன் பக்தர்களை கருணையுடன் ரக் ஷிக்கிறாள்; காப்பாற்றுகிறாள்.
ஓம் சைலபுத்ரீயை நம:
ஓம் சந்திரகான்டாயை நம
ஓம் கூஷ்மாண்டாயை நம
ஓம் ஸ்கந்தமாத்ரே நம
ஓம் காய்யாயதீ தேவ்யை நம
ஓம் காளராத்ரீயை நம
ஓம் மஹாகவுரீயை நம
ஓம் ஸித்திதாத்ரீயை நம
இவ்விதம் நவ துர்கைகள் என்று அழைக்கப்படும் ஆதிபராசக்தியை கோவில்களில் குடி கொண்டு அருள்பாலிக்கும் அன்னையிடம் மனமுருகி இந்த ஆடி மாதத்தில் வழிபட்டால், நமக்கு அன்னை நவ நிதிகளையும் வழங்கி அருள்பாலிப்பாள்.
விதேஷி தேஹி ஐயம் தேஹி யசோதேஹி த்விஷோ ஹே ஜஹி!
ஓ தேவி... மங்களத்தையும், அகண்ட ஐஸ்வர்யத்தையும் ரூபம், வெற்றி, புகழ் ஆகியவற்றையும் தருவாயாக!