முருகன் அலங்காரத்தில் சிவபுரி அம்மன் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூலை 2025 04:07
மேட்டுப்பாளையம்; கோவை மாவட்டம் காரமடை அருகே கோடதாசனூரில் உள்ள ராயர் கோவில் வளாகத்தில் சிவபுரி அம்மன் சன்னதி உள்ளது. ஆடி இரண்டாவது வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றது. முருகன் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். இந்த விழாவில் கோடதாசனூர், மங்லலக்கரை புதூர், வடமங்கலக்கரை புதூர், எட்டப்பன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.