திருவாடானை; திருவடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள சிநேகவல்லி அம்மன், திருவெற்றியூர் பாகம்பிரியாள், தொண்டி உந்திபூத்த பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கு நேற்று ஆடிப்பூரத்தை முன்னிட்டு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் சென்று அம்மனை தரிசனம் செய்தனர்.