திருத்தங்கல் காளியம்மன் கோயில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஆக 2025 04:08
சிவகாசி; திருத்தங்கல் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோயிலில் 67 ம் ஆண்டு ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. காலையில் கணபதி ஹோமத்துடன் கொடியேற்றம் விழா நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்து. தொடர்ந்து பத்து நாட்கள் நடக்கும் திருவிழாவில் தினமும் இரவு 7:00 மணிக்கு அம்மன் சிம்மம் வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். மூன்றாம் நாள் திருவிழாவில் 501 திருவிளக்கு பூஜை, பால்குட ஊர்வலம், 8 ம் நாள் திருவிழாவில் பொங்கல் வைத்து வழிபட்டு முளைப்பாரி ஊர்வலம் நடைபெறும். அன்று மயிலாட்டம், மாடாட்டம் பொய்க்கால் குதிரை, சாட்டை குச்சி ஆட்டம், கோலாட்டம், ஐந்து வகை கரக ஆட்டம் பறை வாத்தியங்களுடன் நடைபெறும்.