கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் கோயிலில் அவதார விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஆக 2025 03:08
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளத்தில் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி கோயிலில் நடைபெற்ற அவதார விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கட்டிக்குளம் கிராமத்தில் கருப்பனேந்தல் மடத்தில் மகா சித்தர் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி கோயில் தவச்சாலை உள்ளது. இங்கு மாதம் தோறும் அமாவாசை, பவுர்ணமி மற்றும் பூராட நட்சத்திர தினங்களில் அபிஷேக, ஆராதனைகள், பூஜைகள்,அன்னதானமும் நடைபெற்று வருகிறது. இன்று ஆடி பூராட நட்சத்திரம் சுவாமிகளின் அவதார விழாவை முன்னிட்டு அதிகாலை சுவாமிகளுக்கு 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு சிவாச்சாரியார்களால் ஹோமங்களும் வளர்க்கப்பட்டு பூர்ணாகுதி பூஜை மற்றும் அபிஷேக,ஆராதனைகள்,பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. விழாவில் மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.