சிவன், விஷ்ணு சிலைகள் ஒரே இடத்தில் இருக்கும் 800 ஆண்டு பழமையான கோவில்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மார் 2026 12:03
சிக்கமகளூரு டவுன் ஹலேஹூப்பள்ளியில் ஹொய்சாளா மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட, 800 ஆண்டுகள் பழமையான ஈஸ்வரர் கோவிலில் உள்ளது. மிகவும் அரிதாக, தனித்துவமான கோவில்களில் மட்டுமே காண முடியும் ஒரு சிறப்பு இக்கோவிலில் உள்ளது. இங்கு சிவன், விஷ்ணு சிலைகள் ஒரே இடத்தில் இருக்கின்றன.
சிவலிங்கத்தின் அடியில் விஷ்ணுவின் புனித அம்சமாக கருதப்படும் நாராயண சாளக்கிராமம் என்ற புனிதமாக கருங்கல் உள்ளது. விஷ்ணுவின் கோவில்களில், சாளக்கிராம கல்லை தரிசிக்க, அவ்வளவு எளிதாக வாய்ப்பு கிடைக்காது. இக்கோவிலில் எளிதில் அக்கல்லை தரிசிக்கலாம்.
கோவில் குறித்து அர்ச்சகர் ஜெகதீஷ் கூறுகையில், ‘‘கோவில் அமைந்திருந்த இடம் ஒரு காலத்தில் மண்ணில் புதைந்து இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் புதையலுக்காக பள்ளம் தோண்டப்பட்டது. கடவுளின் சிலையும், கல்வெட்டுகளும் மட்டுமே எஞ்சி இருந்தன. தற்போது கோவிலை புனரமைத்து வருகிறோம். தினமும் மூன்று நேரம் பூஜை செய்கிறோம். மூகாம்பிகை சிலையை பிரதிஷ்டை செய்ய உள்ளோம்,’’ என்றார்.
கோவில் தினமும் காலை 7:00 முதல் இரவு 8:00 மணி வரை திறந்து இருக்கும்.
பஸ், ரயில் வசதி உள்ளது
* பெங்களூரில் இருந்து சிக்கமகளூரு 241 கி.மீ.,
* மெஜஸ்டிக்கில் இருந்து அடிக்கடி கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள் செல்கின்றன.
* பெங்களூரில் இருந்து சிக்கமகளூருக்கு நேரடி ரயில் சேவையும் உள்ளது.