கோலியனுார் வரதராஜ பெருமாள் கோவிலில் கோகுலாஷ்டமி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஆக 2025 11:08
விழுப்புரம்; விழுப்புரம் அருகே கோகுலாஷ்டமி வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கோலியனுார், வரதராஜ பெருமாள் கோவிலில் கோகுலாஷ்டமி வழிபாடு நடந்தது. காலை 8:00 மணிக்கு மூலவர் பெருமாளுக்கும், உற்சவருக்கும் திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவம் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். விழுப்புரம் அருகே காணைகுப்பம் கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில், விழா காலை 9:00 மணிக்கு தொடங்கியது. மதியம் 2:00 மணிக்கு உறியடி நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் ஆரவாரத்துடன், கிருஷ்ணரின் உறியடி நிகழ்வை நினைவுகூர்ந்தனர். தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனையும் தொடர்ந்து, உற்சவர் வீதியுலாவும் நடைபெற்றது. பஜனை குழுக்கள் பக்தி பாடல்களை பாடி ஊர்வலமாக வந்தனர்.