Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருத்தகிரீஸ்வரர் கோவில் ... அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்ஸவ தேரோட்டம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூடலூர்: ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா ரத யாத்திரை
எழுத்தின் அளவு:
கூடலூர்: ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா ரத யாத்திரை

பதிவு செய்த நாள்

10 செப்
2025
12:09

கூடலூர்: கூடலூரில் சத்ய சாய்பாபா நுாற்றாண்டு விழா ரத யாத்திரை ஊர்வலம் சிறப்பாக நடந்தது.


சத்ய சாய்பாபாவின், 100வது பிறந்த நாளை கொண்டாடி, சாய்பாபாவின் உலகளாவிய அன்பு, சேவை குறித்த செய்திகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில், தமிழகம், கர்நாடகாவில் ரத யாத்திரை நடந்து வருகிறது.


அதன்படி, கர்நாடகா குண்டல்பேட்டையில் ரத யாத்திரை ஊர்வலத்தை நிறைவு செய்த குழுவினர், நேற்று முன்தினம் கூடலுார் வந்தனர்.


நேற்று காலை, ஹெல்த் கேம்ப் சத்ய சாய்பாபா கோவிலிலிருந்து, சிறப்பு பூஜையுடன் ரத ஊர்வலம் துவங்கியது. ஊர்வலத்தில் பக்தர்கள் பஜனை பாடி வந்தனர்.


ஊர்வலம் ஊட்டி – மைசூரு தேசிய நெடுஞ்சாலை, பழைய கோர்ட் சாலை, கோழிக்கோடு சாலை வழியாக சென்று ஜானகி அம்மாள் திருமண மண்டபத்தில் நிறைவு பெற்றது.


அங்கு, சத்திய சாய்பாபா நுாற்றாண்டு விழா சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், பழங்குடி பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர்.


ஊர்வலத்தில், சாய்பாபா சேவை அமைப்பின் மாநில தலைவர் சுரேஷ், மாநில துணைத் தலைவர், சரவணகுமார், மாவட்ட தலைவர் சுந்தர்ராஜன் மற்றும் கூடலுார் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; ஸ்ரீ ராம நவமி தினமான இன்று, அயோத்தி ராமர் கோவிலில், சூரியனின் ஒளிக்கற்றைகள், திலகம் இட்டது ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமியை முன்னிட்டு 2,000 லிட்டர் பாலாபிஷேகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- ராமநவமியையொட்டி கும்பகோணம் ராமசாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி : ராம நவமியை முன்னிட்டு திருமலையில்  ஸ்நபன திருமஞ்சனம் எனும் புனித நீராட்டு வைபவம் ... மேலும்
 
temple news
நாகர்கோவில், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டங்குளங்கரா ஸ்ரீதேவி கோவிலில் ஆண்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar