பதிவு செய்த நாள்
16
செப்
2025
01:09
வாழ்வின் ஒவ்வொரு அடியையும் யோசித்து எடுத்து வைக்கும் உங்களுக்கு புரட்டாசி கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ஞான மோட்சக்காரகன் கேது ஜென்ம ராசிக்குள் சஞ்சரிப்பதால் மனதில் வீண் குழப்பங்களும், குடும்பத்தில் நெருக்கடிகளும், செய்து வரும் தொழிலில் பிரச்னைகளும், பணியில் மேல் அதிகாரிகளின் நெருக்கடிகளும் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. உங்கள் லாபாதிபதி புதன் சஞ்சாரம் மாத முற்பகுதியில் சாதகமாக இருப்பதால் என்ன வந்தாலும் அதை சமாளிக்கும் சக்தியும் திறமையும் ஏற்படும். பொருளாதார நிலை உயரும். செப். 29 வரை புத ஆதித்ய யோகம் இருப்பதால் நினைத்ததை உங்களால் சாதிக்க முடியும். நெருக்கடி நீங்கும் வகையில் பணவரவு வரும். தேவைகள் பூர்த்தியாகி கொண்டிருக்கும். மாதம் முழுவதும் அதிர்ஷ்டக் காரகன் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் வியாபாரம், தொழில் அனைத்திலும் லாபம் காணும் நிலை இருக்கும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு அக். 8 முதல் உங்கள் நிலையில் சில மாற்றம், தடுமாற்றங்களை ஏற்படுத்துவார். புதிய நட்பு வழியே சிலருக்கு அவமானம், நெருக்கடியை உண்டாக்குவார். அதற்கு காரணம் குரு பார்வை ஏழாம் இடத்தை விட்டு விலகுவதுதான். எனவே புதிய நண்பர்களிடம் இக்காலத்தில் எச்சரிக்கையாக இருப்பதுடன், கூட்டுத்தொழிலில் கவனமாக இருக்க வேண்டும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதால் குடும்பத்திற்குள் நிம்மதி இருக்கும். மாதத்தின் பிற்பகுதியில் புதிய முயற்சிகளில் அதிகபட்ச கவனம் தேவை.
அதிர்ஷ்ட நாள்: செப். 19, 25, 28. அக். 1, 7, 10, 16.
பரிகாரம் இம்மையிலும் நன்மை தருவாரை வழிபட சங்கடம் விலகும்.
நினைத்ததை சாதிப்பதில் வல்லவரான உங்களுக்கு புரட்டாசி யோகமான மாதமாகும். அதிர்ஷ்டக் காரகன் சுக்கிரன் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் உங்கள் தோற்றத்தில் பொலிவு இருக்கும். மற்றவர் மத்தியில் கம்பீரமாக வலம் வருவீர்கள். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். கணவன், மனைவிக்குள் இணக்கம் ஏற்படும். வியாபாரிகள் மத்தியில் செல்வாக்கு உயரும். செய்து வரும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பணியாளர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கையுடன் சிலருக்கு புதிய இடம் வீடு வாகனமும் ஏற்படும். நீண்ட நாள் கனவு நனவாகும். மாத்த்தின் முற்பகுதியில் புதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும். ராசிநாதன் வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வார்த்தையில் நிதானம் தேவை. ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் கேது சில சங்கடம், குழப்பங்களை ஏற்படுத்த தயாராக இருப்பதால் அதற்கு உங்களின் வார்த்தைகளும் காரணமாகி விடும் என்பதை மனதில் வைத்து செயல்படுவது நல்லது. அக். 7 வரை சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவிற்கு குரு பார்வை இருப்பதால் நெருக்கடி இல்லாமல் போகும். அதன் பிறகு நட்பு வட்டத்திலேயே எதிர்மறை நிலை ஏற்படும். ஒன்றாக இருந்தவர்களும், நன்றாகப் பழகியவர்களும் விலகிச் செல்லும் நிலை ஏற்படும். இதை கவனத்தில் கொண்டு செயல்படுவது உங்களுக்கு நன்மை தரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். எவரையும் பகைத்துக் கொள்ளாமல் நிதானமாக செயல்படுவது நன்மை தரும்.
அதிர்ஷ்ட நாள்: செப். 19, 24, 28. அக். 1, 6, 10, 15.
பரிகாரம் மகாலட்சுமியை வழிபட வாழ்வில் நிம்மதி உண்டாகும்.
எந்த நிலையில் இருந்தாலும் உயர்ந்த நிலையை அடையும் உங்களுக்கு புரட்டாசி நினைத்ததை சாதிக்கும் மாதமாக இருக்கும். செப்.28 வரை புத ஆதித்ய யோகம் இருப்பதால் உங்களுக்கு இருந்த நெருக்கடி, சங்கடம், பிரச்னை, போட்டிகள் எல்லாம் விலகும். எதிர்பார்த்த பணம் வரும். புதிய சொத்து சேரும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். மாதம் முழுவதும் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயால் முயற்சிகள் ஒவ்வொன்றும் வெற்றியாகும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். சுயதொழில் புரிபவர்களுக்கு பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உடல் நிலை பாதிப்புகள் விலகும். சகோதரர்களுடைய ஆதரவு கிடைக்கும். அக்.7 வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் வருமானம் உயரும். வர வேண்டிய பணம் வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். அக்.8 முதல் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு செலவுகளை அதிகரிப்பார். அதே நேரத்தில் உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவார். எதிர்ப்பு, நோய் நொடி யில் இருந்து மாற்றத்தை ஏற்படுத்துவார். அதிர்ஷ்ட வாய்ப்பை உண்டாக்குவார். அரசியல் வாதிகளுக்கு புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும். நீண்ட நாள் முயற்சி வெற்றியாகும்.
அதிர்ஷ்ட நாள்: செப். 19, 28. அக். 1, 10.
பரிகாரம் காலையில் சூரியனை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.