நவராத்திரி முதல் நாள்; மாதா திரிபுர சுந்தரி கோவிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22செப் 2025 06:09
அகர்தலா: திரிபுராவில் உள்ள மாதா திரிபுர சுந்தரி கோவிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்தார். நவராத்திரியின் முதல் நாளிலேயே பிரதமர் இக்கோவிலுக்கு சென்றுள்ளார்.
திரிபுராவின் கோமதி மாவட்டத்தின் உதய்பூர் நகரில் அமைந்துள்ள பழமையான 51 சக்தி பீடங்களில் ஒன்று மாதா திரிபுர சுந்தரி கோவில். நவராத்திரி முதல் நாளான இன்று பிரதமர் மோடி இந்தக் கோவிலில் இன்று சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக, கோவில் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆன்மிக கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார். தொடர்ந்து, மாதா திரிபுர சுந்தரி கோவில் வளாகத்தின் வளர்ச்சிப் பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். புதிய நடைபாதைகள், புதுப்பிக்கப்பட்ட நுழைவாயில்கள், வடிகால் அமைப்பு, கடைகள், தியான அறை, விருந்தினர் தங்குமிடங்கள் ஆகியவை அடங்கிய மூன்று அடுக்கு கட்டடத்தை திறந்து வைத்தார்.