நவராத்திரி விழா; காஞ்சிபுரம் சங்கர மடத்தில் 108 சுமங்கலி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24செப் 2025 01:09
காஞ்சிபுரம்; நவராத்திரி விழாவையொட்டி, காஞ்சிபுரம் சங்கரமடத்தில், 108 சுமங்கலி பூஜை மற்றும் 108 கன்னிகா பூஜை நேற்று நடந்தன. காஞ்சிபுரம் சங்கரமடத்தில், காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் அருளாணையின்படி, நவராத்திரி விழா நேற்று முன்தினம் துவங்கியது. இதில், இரண்டாவது நாளான நேற்று, உலக மக்கள் நன்மைக்காகவும், அனைத்து உயிரினங்களும் ஆரோக்கியமாக வாழவும், 108 சுமங்கலி மற்றும் 108 கன்னிகா பூஜை நேற்று நடந்தது. இந்த பூஜைகளை காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் ஸ்தானீகர்கள் செய்தனர். இதில், சங்கர மடத்தின் மேலாளர் அரவிந்த் சுப்பிரமணியன், நிர்வாகி கீர்த்தி வாசன், காமாட்சியம்மன் கோவில் மணியக்காரர் சூரியநாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.