பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஒன்னிபாளையம் சக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.
பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், பிளிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட ஒன்னிபாளையம் சக்தி விநாயகர் கோவிலில் மூன்றாவது கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவுக்கு ஓதிமலை சிவநேச அடிகளார் தலைமை வகித்தார். வேள்வியை, வாட் போக்கியார் மற்றும் உமையொரு பாகன் வழிபாட்டு குழுவினர் நடத்தினர். விழாவில், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழாவையொட்டி மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. இதையொட்டி நடந்த நிறைவு விழா திருவிளக்கு பூஜை நிகழ்வை தனுசு ராமச்சந்திரன் நடத்தி வைத்தார். திரளான பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். விழாவையொட்டி சக்தி விநாயகருக்கு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. அன்னதானத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விழா ஏற்பாடுகள், சக்தி விநாயகர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ரங்கராஜ் தலைமையில் செய்யப்பட்டு இருந்தது.