விநாயகருக்கு சிதறுகாய் உடைக்கும் பழக்கம் எப்படி வந்தது?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06அக் 2025 03:10
எந்த ஒரு நல்ல காரியத்தை துவங்கும் முன் விநாயகருக்குச் சிதறுகாய் உடைப்பது வழக்கம். தேங்காயின் மீதுள்ள கனமாக ஓட்டை உடைத்தால் உள்ளே இனிய பருப்பும், இளநீரும் இருக்கும். அதுபோல மனிதனும் அகங்கார எண்ணத்தை விட்டு விநாயகரைச் சரணடைந்தால் வாழ்வு சிறக்கும் என்பதே சிதறுகாய் உடைப்பதன் தத்துவம். ஒருமுறை சிவனிடம், “உங்களின் சிரசையே எனக்கு பலியிட வேண்டும்” என கேட்டார் விநாயகர். தன்னைப் போல மூன்று கண்கள் கொண்ட தேங்காயை படைத்து, அதை விநாயகருக்கு அர்ப்பணித்தார் சிவன். இதன் அடிப்படையில் விநாயகர் வழிபாட்டில் சிதறுகாய் உடைக்கும் பழக்கம் ஏற்பட்டது.
விநாயகருக்கு சிதறுகாய் உடைத்து வழிபட்டால் வாழ்வு சிறக்கும்..!