கவனமாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு, வரும் ஐப்பசி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். ரத்தக்காரன் செவ்வாய் உங்கள் வேலைகளில் தடை, தாமதத்தை ஏற்படுத்துவார். விரயத்தை அதிகரிப்பார். தேவையற்ற பிரச்னைகளை உருவாக்குவார் என்பதால் ஒவ்வொரு வேலையிலும் கவனமாக இருப்பது உங்களுக்கு நன்மை தரும். தனாதிபதி குரு சத்ருஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உடல்நிலையில் சின்னச் சின்ன சங்கடம் தோன்றும். வியாபாரம், தொழிலில் எதிர்ப்பு உண்டாகும். எதிரிகளின் மறைமுகத் தொல்லை உங்களுக்கு நெருக்கடி தரும் என்பதால் ஒவ்வொன்றிலும் கவனமாக இருப்பது அவசியம். அதே நேரத்தில், ஜீவன ஸ்தானத்திற்கு குருவின் பார்வை கிடைப்பதால் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். தொழிலை விரிவு செய்யும் முயற்சி வெற்றி பெறும். வேலை தேடுவோருக்கு எதிர்பார்த்த நல்ல தகவல் வரும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்பார்த்த புதிய மாற்றங்கள் கிடைக்கும். குடும்ப ஸ்தானத்திற்கு குருவின் பார்வை கிடைப்பதால் மனதில் நிம்மதி இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். ஆனால் விரய செலவும் ஒரு பக்கம் இருக்கும். புதிய சொத்து வாங்குவது, வாகனம் வாங்குவது, நவீன பொருட்கள் வாங்குவது, வசிக்கும் வீட்டை வசதிக்கேற்ப மாற்றி அமைப்பது என கையிருப்பு கரையும். அதிர்ஷ்டக் காரகன் சுக்கிரன் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் மனதில் தெளிவு உண்டாகும். பிறருக்கு உதவி செய்யக்கூடிய நிலை ஏற்படும்.
சந்திராஷ்டமம்: அக்.19, நவ.15.
அதிர்ஷ்ட நாள்: அக்.17,18,26,29, நவ.8, 9
பரிகாரம் நவக்கிரக வழிபாடு நன்மையைத் தரும்.
சதயம்
திட்டம் தீட்டுவதிலும் அதில் வெற்றி பெறுவதிலும் முதன்மையாக இருக்கும் உங்களுக்கு, ஐப்பசி கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகு ஆசைகளை அதிகரிப்பார். பெரிய முயற்சிகளை மேற்கொள்ள வைப்பார். வருமானத்திற்கு வழிகாட்டுவார். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது தவறானவர்களின் நட்பை உண்டாக்கி தவறான பாதைக்கு உங்களை அழைத்துச் செல்ல வாய்ப்புண்டு. புதியவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. பூர்வ புண்ணியாதிபதி புதன் சஞ்சாரம் சாதகமாக இல்லை என்பதால் என்ன தான் திட்டம் தீட்டினாலும் அவற்றில் தவறுகள் ஏற்படும். அவசரப்பட்டு சில வேலைகளில் இறங்கி சங்கடத்திற்கு ஆளாகும் நிலை ஏற்படும். ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக இருப்பது நன்மை தரும். ஒப்பந்தம், பத்திரங்களில் கையெழுத்து இடும் முன் நன்றாகப் படித்துப் பார்ப்பது அவசியம். சப்தமாதிபதி சூரியன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தெய்வ அருளும் பெரிய மனிதர்களின் உதவியும் கிடைக்கும். அரசு வழியில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்களின் செல்வாக்கு உயரும். விற்க முடியாத சொத்தை விற்பது வாங்க நினைத்த இடத்தை வாங்குவது என முயற்சிகள் வெற்றி பெறும். கையில் பணப்புழக்கம் இருந்து கொண்டிருக்கும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். குடும்பத்திற்குள் சுபிட்ச நிலை இருக்கும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கு மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறும். உங்களின் தனித்தன்மை வெளிப்படும்.
சந்திராஷ்டமம்: அக்.19, 20, நவ.16
அதிர்ஷ்ட நாள்: அக்.17,22,26,31, நவ.4,8,13
பரிகாரம் அனுமனை வழிபட அல்லல் அனைத்தும் மறையும்.
பூரட்டாதி 1, 2, 3 ம் பாதம்
தெளிந்த சிந்தனையும் பிறருக்கு வழிகாட்டும் ஆற்றலும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ஞானக்காரகன் குரு 6ம் இடத்தில் சஞ்சரிப்பதால் மறைமுக எதிர்ப்பு வலுக்கும். தேவையற்ற பிரச்னைகள் தேடி வரும். உடல் நிலையில் ஏதேனும் சங்கடங்கள் இருந்து கொண்டே இருக்கும். வழக்கு, விவகாரம் இழுபறியாகும். குருவின் பார்வைகள் 2, 10, 12 ம் இடங்களுக்கு கிடைப்பதால் குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். நினைத்த வேலைகளை நடத்திக் கொள்ள முடியும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் பெறும். வேலையில் இருந்த பிரச்னைகள் விலகும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் நிலை உண்டாகும். தெய்வ நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் புதிதாக நம்பிக்கை உண்டாகும். ஜென்ம ராசிக்குள் ராகுவும், சப்தம ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உங்களைப் பற்றிய ரகசியங்களை யாரிடமும் சொல்லாமல் இருப்பதும், அடுத்தவர் பிரச்னைகளில் தலையிடாமல் இருப்பதும் அவசியம். வெளிநாட்டு விவகாரங்களில் கூடுதல் கவனம் தேவை. வெளிநாட்டில் வசிப்பவர்கள் சட்ட சிக்கல்களுக்கு ஆளாகாத வகையில் வாழ்வு நடத்துவது மிக அவசியம். மாணவர்களுக்கு படிப்பின் மீது அக்கறை ஏற்படும்.
சந்திராஷ்டமம்: அக்.20,21
அதிர்ஷ்ட நாள்: அக்.17,21,26,30,நவ.3,8,12
பரிகாரம் மாரியம்மனை வழிபட வாழ்வில் வளம் காண்பீர்கள்.
மேலும்
ஐப்பசி ராசி பலன் (18.10.2025 முதல் 16.11.2025 வரை) »