பிறருக்கு வழிகாட்டியாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான மாதமாகும். ராசிநாதன் குரு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரித்து ராசியை பார்ப்பதால் இத்தனை நாளும் உங்களுக்கு இருந்த நெருக்கடி, பிரச்னைகள் யாவும் விலகும். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். உங்களை அலட்சியமாக பார்த்தவர்களும் தலைநிமிர்ந்து பார்க்கும் நிலை உண்டாகும். அந்தஸ்து, கவுரவம் என உங்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். தனியார் நிறுவன பணியாளர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். தம்பதிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். கோயில்களுக்கு செல்ல முடியவில்லையே, வேண்டுதலை நிறைவேற்ற முடியவில்லையே என தவிப்பவருக்கு இந்த மாதத்தில் அதற்குரிய வாய்ப்பு உண்டாகும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் அமையும். பொருளாதார நிலை உயரும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். குழப்பங்கள் விலகி முன்னேற்றத்தை நோக்கி நடை போடுவீர்கள். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். நட்பு வழியே உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
சந்திராஷ்டமம்: அக்.21
அதிர்ஷ்ட நாள்: அக்.30,நவ.3,12
பரிகாரம் லட்சுமி நரசிம்மரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
உத்திரட்டாதி
வாழ்க்கையின் அர்த்தம் புரிந்து வாழும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி நன்மையான மாதமாகும். விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி வக்கிரம் அடைந்துள்ள நிலையில் அங்கு சஞ்சரிக்கும் ராகு, சனியின் காரகத்துவம் பெறுவதால், திடீர் செலவு, அலைச்சல் என சங்கடங்களுக்கு ஆளாக நேரிடும். ஆனால் உறவினர், நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பர். நவ. 3 வரை சப்தம ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் மனதில் சஞ்சலம், சபலம் உண்டாகும். தவறானவர்களையும் நல்லவர்களாக நம்பி பழக ஆரம்பிப்பீர்கள். அவர்கள் வழியே படிப்பினை கற்றுக் கொள்வீர்கள். ஞான மோட்சக்காரகன் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்ப்பு, பிரச்னை, சோதனை வந்தாலும் அதை சமாளிக்கும் நிலை உண்டாகும். வேலைகளில் பிரச்னை, தொழிலில் தடை, வியாபாரத்தில் நஷ்டம் என்ற நிலை இனி மாறும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்பு உண்டாகும். ராசிநாதன் குரு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். பிள்ளைகளுக்காக மனம் வருந்தி கொண்டிருந்த நிலை மாறும். வேலை வாய்ப்பு, திருமணம் என்ற கனவு நனவாகும். அக். 27 வரை செவ்வாயும், மாதம் முழுவதும் சூரியனும் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் கவனம் தேவை. வாகன பயணத்தில் எச்சரிக்கை அவசியம். மருந்து மாத்திரைகள் எடுப்போர் மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் இந்த மாதத்தில் எடுக்க வேண்டாம். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். பெண்கள் நினைத்ததை சாதிக்கும் நிலை இருக்கும்.
சந்திராஷ்டமம்: அக்.21,22
அதிர்ஷ்ட நாள்: அக்.17, 26, 30, நவ.3, 8, 12
பரிகாரம் மகாலிங்கேஸ்வரரை வழிபட வாழ்வில் ஏற்பட்ட தடை விலகும்.
ரேவதி
அறிவாற்றலும் பிறருக்கு வழிகாட்டும் திறமையும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் முன்னேற்றமான மாதமாகும். அக். 27 வரை அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் புதன் உங்கள் கனவுகளை நனவாக்குவார். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வேலைகள் நடந்தேறும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கைக்கு வரும். வங்கியில் கேட்டிருந்த கடன் கிடைக்கும். இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றி பெறும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும். நவ.3 வரை எதிர்பாலினரால் பொருளாதார இழப்பு, அலைக்கழிப்பு, வேலையில் கவனமில்லாத நிலை ஏற்பட வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ராசிநாதன் 5 ம் இடத்தில் சஞ்சரித்து ராசியை பார்ப்பதால் உங்கள் மனமே தவறான செயல்களுக்கு தடை போடும். முன்னேற்றப் பாதையில் நடை போட வைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகளை உருவாக்கும். வியாபாரம், தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். ஷேர் மார்க்கெட் வணிகம் லாபத்தை தரும். உறவினர்களின் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். மனதில் நிம்மதி உண்டாகும். இழுபறியாக இருந்த வழக்கு விவகாரம் முடிவிற்கு வரும். தந்தைவழி உறவுகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர். வேலைப் பார்க்கும் இடத்தில் செல்வாக்கு உயரும். நீண்ட நாளாக எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட சங்கடம் விலகி இணக்கம் ஏற்படும். அந்தஸ்து உயரும். புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: அக்.22, 23
அதிர்ஷ்ட நாள்: அக். 21, 23, 30. நவ. 3, 5, 12, 14
பரிகாரம் உலகளந்த பெருமாளை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
மேலும்
ஐப்பசி ராசி பலன் (18.10.2025 முதல் 16.11.2025 வரை) »