விடாமுயற்சியால் வெற்றியடைந்து வரும் உங்களுக்கு, வரப் போகும் ஐப்பசி மாதம் யோகமான மாதமாகும். ஆத்ம காரகனான சூரியன் ஜீவன ஸ்தானத்தில் இருப்பதால் உங்கள் நிலையில் இருந்த சங்கடம் விலகும். சோதனை, வேதனைகள் இருந்த இடம் தெரியாமல் போகும். செல்வாக்கு உயரும். வியாபாரம், தொழில் லாபம் தரும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். நீண்ட நாளாக முயற்சி செய்தும் கிடைக்காத இடமாற்றம், பதவி உயர்வு இந்த மாதத்தில் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க முயற்சித்தவர்களுக்கு அதற்குரிய வாய்ப்பு அமையும். வேலை தேடி வந்தவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும். உங்கள் லாபாதிபதி செவ்வாய் அக். 27 முதல் லாப ஸ்தானத்தில் ஆட்சி பெறுவதால் வருமானம் உயரும். தொழிலில் ஏற்பட்ட தடை, பிரச்னைகள் முடிவிற்கு வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். நவ. 3 முதல் சுக்கிரன் சஞ்சாரம் எதிர்மறையாக இருப்பதால் வரவு, செலவில் கவனமாக இருப்பது நல்லது. பிறரை நம்பி எந்தவொரு வேலையையும் நவ.3 க்குப் பிறகு ஒப்படைக்க வேண்டாம். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். மருத்துவம் காவல்துறையினருக்கு நீண்டநாள் கனவு நனவாகும்.
சந்திராஷ்டமம்: நவ.13.
அதிர்ஷ்ட நாள்: அக்.17,19,26,28,நவ.1,8,10
பரிகாரம் மகாலிங்கேஸ்வரரை வழிபட்டால் முன்னேற்றம் உண்டாகும்.
திருவோணம்
நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற க் குறிக்கோளுடன் வாழும் உங்களுக்கு, ஐப்பசி மாதம் முன்னேற்றமான மாதமாகும். ஞானகாரகன் குரு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து ராசியைப் பார்ப்பதால் இது வரையில் உங்களுக்கிருந்த நெருக்கடி, பிரச்னைகள், போராட்டம் எல்லாம் முடிவிற்கு வரும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். வருமானம் பல வழியிலும் வர ஆரம்பிக்கும். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். சகோதரர்களுடைய ஒத்துழைப்பு கிடைக்கும். வித்யாகாரகன் புதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றி பெறும். கலைஞர்கள், வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். குடும்ப ஸ்தானத்தில் ராகு, அஷ்டம ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்திற்குள் சலசலப்பு இருக்கும். பேச்சால் சங்கடத்தை சந்திக்கும் நிலை ஏற்படும். அதனால் நிதானம் காப்பது நல்லது. அஷ்டம கேது உடல் நிலையில் சங்கடங்களை ஏற்படுத்துவார். அல்லது அவமானத்திற்கு ஆளாக்குவார். உடல்நலனில் கவனம் செலுத்துவதுடன், ஒழுக்கமாக இருப்பதும் அவசியம். தம்பதி ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வது இந்த மாதத்தில் அவசியம்.
சந்திராஷ்டமம்: அக்.18. நவ.14
அதிர்ஷ்ட நாள்: அக்.17,20,26,29, நவ.2,8,11
பரிகாரம் ஏழுமலையானை வழிபட மனம் தெளிவாகும். முன்னேற்றம் உண்டாகும்.
அவிட்டம் 1, 2 ம் பாதம்
நிதானமாக செயல்பட்டு முன்னேற்றம் காணும் உங்களுக்கு, ஐப்பசி மாதம் யோகமான மாதமாகும். அக். 27 வரை செவ்வாய் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரித்து வீண் அலைச்சல், விரயத்தை ஏற்படுத்தினாலும், அதன் பிறகு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த அளவிற்கு வருமானம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் நவ.3 வரை பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நல்ல சிந்தனை உண்டாகும். வருமானம் உயரும். பிறருக்கு உதவும் அளவிற்கு உங்கள் நிலை மாறும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். மாதம் முழுவதும் சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதால் பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அரசு வழி முயற்சி வெற்றி பெறும். எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். குருவின் பார்வை ராசிக்கு கிடைப்பதால் திருமண வயதினருக்கு தகுதியான வரன் அமையும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். செல்வாக்கு உயரும். ஒப்பந்ததாரர்களுக்கு நிலுவையில் இருந்த பணம் வசூலாகும். சுயதொழில் புரிவோருக்கு பணியாளர் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை ஏற்படும். பெரியோரின் ஆதரவு உண்டாகும். மண வாழ்வில் முறிவு ஏற்பட்டவர்களுக்கும், வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கும் மறுமணம் நடக்கும் நிலை உண்டாகும். வியாபாரம் லாபம் தரும். தொழில் முன்னேற்றம் அடையும். வேலையில் இருந்த பிரச்னை விலகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: அக்.18. நவ.15
அதிர்ஷ்ட நாள்: அக்.17,26,27,நவ.8,9
பரிகாரம் திருச்செந்துார் முருகனை வழிபட நன்மை உண்டாகும்.
மேலும்
ஐப்பசி ராசி பலன் (18.10.2025 முதல் 16.11.2025 வரை) »