ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29அக் 2025 11:10
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.
ரிஷிவந்தியத்தில் உள்ள பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவிலில், சுப்பிரமணிய சுவாமி தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில், கடந்த 22ம் தேதி கந்தசஷ்டி விழா துவங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. உற்சவத்தின் 6வது நாளையொட்டி கோவிலில் உள்ள பஞ்சமூர்த்தி சுவாமிகள் மற்றும் சுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், இளநீர், தேன் உட்பட 16 வகையான விஷசே திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, மகா தீபாராதணை காண்பிக்கப்பட்டது. கோவிலில் திருப்பணிகள் நடந்து வருவதால் சூரசம்கார நிகழ்ச்சி நடைபெறவில்லை. பூஜைக்கான ஏற்பாடுகள் செங்குந்தர் சமூகத்தினர் செய்திருந்தனர். பெண்கள் மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.