புற்று மாகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு நிறைவு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29அக் 2025 02:10
அவிநாசி; வேலாயுதம்பாளையம் காசிகவுண்டன் புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ புற்று மாகாளியம்மன், ஸ்ரீ அர்ஷவதன நாராயணப் பெருமாள், ஸ்ரீ கருப்பராய சாமி மற்றும் ஸ்ரீ கண்ணிமார் கோவிலில் கும்பாபிஷேக 9ம் ஆண்டு நிறைவு விழா, 108 சங்காபிஷேக பூஜைகள் நடைபெற்றது.
அவிநாசி அடுத்த வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட காசி கவுண்டன் புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ புற்று மாகாளியம்மன்,ஸ்ரீ அர்ஷவதன நாராயண பெருமாள்,ஸ்ரீ கருப்பராய சாமி உள்ளிட்ட பரிவார மூர்த்திகளின் கோவிலில், கும்பாபிஷேக 9ம் ஆண்டு நிறைவு விழாவும், அதனை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேகம்,அலங்கார பூஜைகளும் நடைபெற்றது. முன்னதாக கணபதி ஹோமம், நவகிரக ஹோமம்,அஷ்டலட்சுமி ஹோமம் ஆகியவை நடைபெற்றது. கும்பாபிஷேக ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் மற்றும் காசி கவுண்டன்புதூர் ஊர் மக்கள் சார்பில்,பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.