பழநி முருகன் கோயிலில் மேற்கு வங்க கவர்னர் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03நவ 2025 04:11
பழநி; பழநி முருகன் கோயிலில் இன்று மேற்கு வங்க கவர்னர் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.
பழநி முருகன் கோயிலுக்கு மேற்கு வங்க கவர்னர் சி.வி.ஆனந்தபோஸ் குடும்பத்துடன் வருகை புரிந்தார். அவருக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது அதன் பின் கோயில் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ரோப் கார் மூலம் கோயிலுக்குச் சென்ற கவர்னர் சுவாமி தரிசனம் செய்தார். அதன் பின் போகர் சன்னதியில் வழிபட்டார். கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. ரோப் கார் மூலம் கிரி விதி வந்த கவர்னர் மதுரை விமான நிலையத்திற்கு சென்றார்.