Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி ... தர்மத்தின் வழியில் பெறும் சந்தோஷமே நிரந்தரம்; தினமலர் இணை இயக்குநர் ஆர்.லட்சுமிபதி பேச்சு தர்மத்தின் வழியில் பெறும் சந்தோஷமே ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நடனபாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் : பக்தர்கள் கோரிக்கை
எழுத்தின் அளவு:
நடனபாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் : பக்தர்கள் கோரிக்கை

பதிவு செய்த நாள்

09 நவ
2025
01:11

நெல்லிக்குப்பம்: நடனபாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை விரைந்து நடத்த கோரிக்கை எழுந்துள்ளது.


நெல்லிக்குப்பம், திருக்கண்டேஸ்வரத்தில், 1400 ஆண்டுகள் பழமையான ஹஸ்ததாளாம்பிகை உடனுறை நடனபாதேஸ்வரர் கோவில் உள்ளது.


இக்கோவிலில் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் காலத்தில் திருப்பணிகள் நடந்ததற்கான கல்வெட்டுகள் உள்ளன.


அதேபோல் நாயன்மார்களால் பாடல் பெற்ற கோவில் என்பதற்கான கல்வெட்டுகளும் கோவில் வளாகத்தில் இடம் பெற்றுள்ளன. இங்கு பைரவருக்கு தனி சன்னதி உள்ளது.


அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள இக்கோவில் வளாகத்திலேயே பெரிய குளம் உள்ளது. இதில் ஆனி மாத பிரம்மோற்சவத்தின் போது தெப்ப உற்சவம் நடக்கும். இக்கோவில் கும்பாபிஷேகம், கடந்த 19 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. அதற்கு பிறகு நடைபெறவில்லை. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமென்பது ஆகம விதி. இதற்காக திருப்பணிகள் செய்ய ரூ. 41 லட்சமும்,தேர் செய்ய ரூ.43 லட்சமும் அறநிலையத்துறை ஒதுக்கியது.


இதில் தேர் செய்யும் பணிகள் முடிந்து வெள்ளோட்டமும் நடத்தினர். கும்பாபிஷேகம் செய்வதற்காக திருப்பணிகளை கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன் துவக்கினர். கோவில் கோபுரங்கள் பணி முடிந்து ‘பெயிண்டிங்’ வேலையும் முடிந்தது. அப்போது தான் கோவிலின் மகா மண்டபத்தில் கருங்கல் துாண்களில் விரிசல் இருப்பதை பார்த்தனர்.


பழமையான கோவில் என்பதால் தொல்லியல் துறையில் அனுமதி பெற்றே, மகா மண்டபத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும்.


இதற்கான அனுமதி கிடைக்க கால தாமதமானதால், அந்த பணியை செய்ய முடியவில்லை. தற்போது தான் அதற்கான அனுமதி கிடைத்துள்ளது.


இக்கோவிலுக்கு சொந்தமாக 30 ஏக்கர் நிலம் இருந்தும் திருப்பணியை முடிக்காமல் காலம் தாழ்த்துவதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.


இது குறித்து உடனடியாக அறநிலையத்துறை அதிகாரிகள், மகா மண்டபம் பணியை முடித்து கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar