திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோயில் சங்கடஹர சதுர்த்தி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09நவ 2025 01:11
நத்தம்: திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோயில் விநாயகர் சன்னதியில் சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது.
இதையொட்டி விநாயகப் பெருமானுக்கு அருகம்புல்,ரோஜா, மல்லிகை, உள்ளிட்ட பல பூமாலைகள் செலுத்த சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.
அய்யாபட்டி மாணிக்க விநாயகர் கோயில், வேம்பார்பட்டி சக்தி விநாயகர் கோயில்,கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் விநாயகர், குட்டூர் உண்ணாமுலை அம்பாள் கோயிலில் உள்ள வலம்புரி விநாயகர் சன்னதி, பகவதி அம்மன் கோவிலில் உள்ள வெற்றி விநாயகர் சன்னதிகளிலும் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.