Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மைசூரின் ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடம் ஜடா தீர்த்தத்தில் வில்வ இலை மூழ்கும் அதிசயம் ஜடா தீர்த்தத்தில் வில்வ இலை ...
முதல் பக்கம் » துளிகள்
சிவலிங்கத்தின் உருவம் தானாக மாறும் 2 கோவில்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிவலிங்கத்தின் உருவம் தானாக மாறும் 2 கோவில்கள்

பதிவு செய்த நாள்

16 டிச
2025
11:12

சிவலிங்கத்தை தரிசனம் செய்வது பாவங்களை போக்கும். கல்வி, செல்வம், அறிவு கிடைக்கும். திருமண தடை நீங்கும்; வாழ்க்கையில் ஏற்படும் எதிர்மறையான எண்ணங்கள் குறையும் என்பது, பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. வில்வ இலைகளை படைத்து, சிவலிங்கத்தை வழிபடுவது அதிக பலன்கள் தருகிறது. அதிலும், உருவம் தானாக மாறும் சிவலிங்கத்தை வழிபட்டால் கூடுதல் பலன் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. தமிழகத்தில் உள்ள ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் ஒரு நாளைக்கு,5 முறை சிவலிங்கம் நிறம் மாறுகிறது. இதுபோல கர்நாடகாவில் உடுப்பியில் உள்ள ஸ்ரீகாந்தேஸ்வரா கோவிலிலும், கோலாரின் முல்பாகலில் உள்ள விருபாக் ஷி கோவிலிலும் சிவலிங்கத்தின் நிறம் மாறுகிறது.


உடுப்பியின் காந்தவாரா கிராமத்தில் உள்ளது ஸ்ரீ காந்தேஸ்வரா கோவில். இந்த கோவிலில் சிவலிங்கம் பகலில் வெள்ளி நிறத்திலும், மதியம் செம்பு நிறத்திலும், மாலை தங்க நிறத்திலும் காட்சி அளிக்கிறது. இதன் மர்மம் என்னவென்று இன்று வரை யாருக்குமே தெரியவில்லை. சுமார் 900 ஆண்டுகள் பராம்பரியம் கொண்ட இந்த கோவிலுக்கும், அங்கு உள்ள சம்பகா மரத்திற்கும் ஒரே வயது தான். பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில் கட்டட கலைக்கு எடுத்து காட்டாகவும் உள்ளது. நிறம் மாறும் சிவலிங்கத்தின் தோற்றம் பக்தர்கள் மனதை வசீகரிக்கிறது. மஹா சிவராத்திரி, ஆண்டு திருவிழா இங்கு வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.


கோவிலின் நடை தினமும் காலை 7:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை திறந்து இருக்கும். பெங்களூரில் இருந்து 442 கி.மீ., துாரத்தில் காந்தேஸ்வரா கோவில் உள்ளது. மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து உடுப்பிக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள் செல்கின்றன. ரயிலில் வசதியும் உள்ளது. இதுபோல கோலாரின் முல்பாகலில் உள்ள விருபாக் ஷி கோவிலின் சிவலிங்கமும் ஒரு நாளைக்கு மூன்று முறை மாறும் தன்மை கொண்டது. விஜயநகர் பேரரசர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவிலும் கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இங்குள்ள சிவலிங்கம் அத்ரி மகரிஷி முனிவரால் நிறுவப்பட்டதாக வரலாறு கூறுகிறது.


ஆண்டிற்கு ஒரு முறை நடக்கும் ரத உற்சவம், சங்கராந்திக்கு அடுத்த நாள் நடக்கும் ரத சப்தமி இங்கு பிரசித்தி பெற்றது. கோடிலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து 20 கி.மீ., துாரத்திலும்; அவனி மலையில் இருந்து 7 கி.மீ., துாரத்திலும், குருடுமலை விநாயகர் கோவிலில் இருந்து 12 கி.மீ., துாரத்திலும் விருபாக் ஷி கோவில் அமைந்து உள்ளது. கோவில் நடை தினமும் காலை 6:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை திறந்து இருக்கும். 

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news

புகழ் பெற வேண்டுமா செப்டம்பர் 28,2026

நரசிம்மர், கருடன், பெரியாழ்வார் மூவருக்குரிய நட்சத்திரம் சுவாதி. ஸ்ரீவில்லிபுத்துாரிலில் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
ஓம் அனுமனே போற்றிஓம் அஞ்சனை மைந்தனே போற்றிஓம் அறக்காவலனே போற்றிஓம் அவதார புருஷனே போற்றி ஓம் அறிஞனே ... மேலும்
 
temple news
* நல்லதைச் செய். உனக்கு நல்லதே நடக்கும். * அறிவுக்கு முற்றுப்புள்ளி வைக்காதே. வாழ்நாள் முழுவதும் படி.  * ... மேலும்
 
temple news
* பொறுமையாக இரு. அதை விட உயர்ந்த பண்பு வேறில்லை. * கடவுளின் பெயரைச் சொல். நல்லதே நடக்கும்.  * உலகம் ... மேலும்
 
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar