கவலையற்றவர்களை காண்பது இன்று பெரிய கனவு. ஜாலியாக இருப்பது போல முகத்தில் காட்டிக் கொண்டாலும் மனதிற்குள் அழுதபடி இருக்கிறார்கள். இவர்களுக்கு சாப்பாடு இறங்காது. துாக்கமோ வராது. படுக்கையில் புரள்வது நிற்காது. அவர் அருகில் படுத்திருப்பவருக்கு தான் திண்டாட்டம். ‘எனக்கு மட்டும் வாழ்க்கையில் ஏன் இப்படி நடக்கிறது. நான் என்ன பாவம் செய்தேன். இதற்கு ஒரு முடிவு கிடையாதா...’ என ஆண்டவரிடம் கேள்வி கேட்பார். இவர்களுக்கு ஆறுதல் அளிக்கிறார் இயேசு. ‘என் பிள்ளைகளே! எதை பற்றியும் கவலை வேண்டாம். அதை மாற்றுவதற்கு நான் இருக்கிறேன். தைரியமாக இருங்கள். உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படும். கவலை தீரும்’ என்கிறார்.