ஸ்ரீ ராமபிரான் வைகுண்டம் அடையும் போது எமனின் பாதையை தடுத்தார் அனுமன்ராமபிரான் பூலோகத்தை விடுத்து வைகுண்டம் செல்ல எண்ணினார். இதை அனுமன் விரும்பமாட்டார் என்று அறிந்த ராமர் அதற்கு ஒரு முடிவு செய்தார். தன் மோதிரம் பூமியில் விழுந்து விட்டது தேடி வா என்று அனுமனை அனுப்பி விட்டார். அனுமன் வருவதற்கு முன் ராமர் வைகுண்டம் சென்றார்.,
யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்
பாஷ்பவாரி பரிபூரண லோசனம்
மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்…!!!
‘எங்கெல்லாம் ஸ்ரீராம நாமம் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் பக்திப் பரவசத்துடன் கண்களில் நீர் மல்கக் காட்சி தந்து கொண்டிருப்பவர் எவரோ, அவரே அனுமன் என்று தெரிந்துகொள் ‘ இதுதான் இந்த ஸ்லோகத்தின் பொருள். பக்திபூர்வமாக ராமநாமம் ஜபிக்கும் அனைவரும் ஆஞ்சநேயரின் அருளைப் பெற்று சிறக்க வாழலாம்.