மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கிராமத்தில் கருப்பனேந்தல் மடத்தில் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் கோயிலில் மகா வேள்வி யாகம் நடைபெற்றது.இக்கோயிலில் வருடம் தோறும் உலக நன்மைக்காகவும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் மகா வேள்வி யாகம் நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டிற்கான மகா வேள்வி யாகம் மாயாண்டி சுவாமி சன்னிதானம் முன்பாக யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு பனையபட்டி செழியன் சுவாமிகள் தலைமையில் சித்தர்கள் வழியில் தமிழ் முறைப்படி மகா வேள்வி யாகம் நடைபெற்றது. முன்னதாக கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிக்கு பால், பன்னீர்,சந்தனம், குங்குமம், திரவியம், நெய் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு அபிஷேக, ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றது. விழாவில் மதுரை, மானாமதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு பிரசாதமும் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கருப்பனேந்தல் மடத்தின் நிர்வாகிகள்,கட்டிக்குளம் கிராம மக்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.