பதிவு செய்த நாள்
14
ஜன
2026
10:01
விருச்சிகம்: விசாகம் 4 ம் பாதம்:
எந்த வேலையை எப்படி முடிக்க வேண்டும் எனத் தெரிந்த உங்களுக்கு பிறக்கும் தை மாதம் யோகமான மாதமாகும். உங்கள் தன குடும்பாதிபதியும், பூர்வ புண்ணியாதிபதியுமான குரு எட்டில் வக்கிரம் அடைந்த நிலையில் அவர் முன் ராசிக்குரிய பலனை வழங்க வேண்டியவராகிறார் என்பதால், குடும்பத்தில் சுபிட்சம் நிலவும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும். தைரியமாக செயல்படும் மனநிலை உண்டாகும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். விற்பனையில் எதிர்பார்த்த லாபம் வரும். பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். சமீபத்தில் உறவுகள், நண்பர்களால் நிறைய அனுபவங்களை அடைந்திருக்கும் நீங்கள் வாழ்க்கையை எப்படி நடத்த வேண்டும், இனி எப்படி வாழ வேண்டும் என்ற முடிவிற்கு வருவீர்கள். கர்மக்காரகன் சனி பகவானின் பார்வை ராசிக்கு கிடைப்பதால் உங்கள் செயல்களில் நிதானம் இருக்கும். எடுக்கும் வேலைகள் உடனுக்குடன் முடிவிற்கு வராமல் இழுபறியாகும். அதற்காக மனம் தளர வேண்டாம். சனி நிதானமாக பலன் தரக் கூடியவர் என்பதால் உங்கள் உழைப்பிற்குரிய பலன் கிடைக்கும். அதே நேரத்தில் உடல் நிலையில் கூடுதல் கவனம் தேவைப்படும். கடந்த இரண்டரை ஆண்டாகவே சனிப் பார்வையால் உங்கள் உடல் நிலையில் ஏதேனும் பாதிப்பு இருக்கும். விரைவில் சனிப்பெயர்ச்சியாக இருப்பதால் சங்கடம் விலகும். தை மாதம் வாழ்வில் நிறைய மாற்றத்தை சந்திப்பீர்கள். நன்மை அடையும் மாதமாகவும் இருக்கும். விவசாயத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நாள்: ஜன.18, 21, 27, 30. பிப். 3,9,12
வராகியை வழிபட எதிர்ப்பு விலகும். நன்மை உண்டாகும்.
வாழ்க்கை என்பது என்ன, உறவினர் என்பவர் யார் என்பதை நன்கு அறிந்த உங்களுக்கு தை மாதம் நன்மை தரும் மாதமாக அமையும். சனி சுகஸ்தானத்தில் சஞ்சரித்து உடல், மனரீதியாகசங்கடம் தருவதுடன், அவரது பார்வையாலும் சங்கடப்படுத்தும் நிலையில் சூரியன், செவ்வாய் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது கடலில் தத்தளிப்பவர் கரைக்கு வந்தது போல மகிழ்ச்சியைத் தரும். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வேலைகள் இப்போது நடக்கும். குடும்பம், தொழில், வேலையில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். கனவாகவே இருந்த பல முயற்சிகள் கைக்கூடும். உடல் நிலையிலும் முன்னேற்றம் ஏற்படும். தைரியமாக செயல்படும் மனநிலை உண்டாகும். தொழிலில் லாபம் காண்பீர்கள். இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றி பெறும். சிலர் சொந்த வீட்டில் குடியேறுவர். சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். பெரிய அளவில் சங்கடங்களை சந்தித்த உங்களுக்கு இந்த மாதம் சாதகமாக அமையும். மனதில் நிம்மதி ஏற்படும். ஆனால் தாய்வழி உறவுகளுடன் இடைவெளி ஏற்படும். பணியாளர்கள் பொறுப்புணர்ந்து செயல்படுவதால் நன்மை தரும். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் படிப்பில் அக்கறை ஏற்படும். குடும்பத்தில் சுபிட்சம் நிலவும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட சங்கடம் விலகும். பணவரவு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நாள்: ஜன.17, 18, 26, 27, பிப். 8, 9
நெல்லையப்பரை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.
திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு தை மாதம் யோகமான மாதமாகும். ஜன.29 வரை புத ஆதித்ய யோகத்தால் தெளிவாக செயல்படுவீர்கள். எடுத்த வேலைகளில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். இழுபறியாக இருந்த முயற்சிகள் வெற்றியாகும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடியவில்லை. எடுத்த வேலைகளை நடத்தி முடிக்க முடியவில்லை என்ற நிலை மாறும். வருமானம் அதிகரிக்கும். சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசிநாதனும் சூரியனும் செல்வாக்கை உயர்த்துவர். எந்தவித சங்கடங்கள் வந்தாலும் அதை சமாளித்து வாழும் நிலை உண்டாகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். மாதம் முழுவதும் சப்தமாதிபதி சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். நேற்று வரை நெருக்கடியில் இருந்த உங்களுக்கு தை மிக யோகமான மாதமாக இருக்கும். இதுவெல்லாம் எப்படி நடந்தது, மந்திரமா மாயமா என நினைக்கும் அளவிற்கு எதிர்பார்ப்பு நிறைவேறும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும். பட்டம் பதவி என்ற கனவு நனவாகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். எதிரிகளை எதிர்த்து வெற்றி பெறும் நிலை ஏற்படும். ஜன. 29 முதல் வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். கலைஞர்கள் முன்னேற்றம் காண்பர். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். விவசாயத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நாள்: ஜன.18, 23, 27. பிப். 5, 9
பரிகாரம் : ரங்கநாதரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.