எடுத்த வேலையில் உறுதியாக இருந்து வெற்றி அடைந்துவரும் உங்களுக்கு பிறக்கும் தை மாதம் முன்னேற்றமான மாதமாகும். ராசிக்குள் சஞ்சரிக்கும் சூரியன் ஓய்வு உறக்கமின்றி உங்களை செயல்பட வைப்பார். ஒவ்வொரு வேலையையும் முடிப்பதற்காக அடுத்து அடுத்து என்று ஓடிக் கொண்டிருப்பீர்கள். வருமானம் மட்டுமே இந்த நேரத்தில் உங்களுடைய நோக்கமாக இருக்கும். உங்கள் லாபாதிபதி செவ்வாயும் ராசிக்குள் சஞ்சரிப்பதால் வருமானம் அதிகரிக்கும். தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரிகள் தங்கள் நிறுவனத்தை மேலும் விரிவு செய்வீர்கள். உங்கள் கனவாக இருந்த சொந்த வீடு இப்போது அமையும். வீடு வாங்குவது, வீடு கட்டுவது போன்ற முயற்சிகள் வெற்றியாகும். அரசியலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு செல்வாக்கு உயரும். சத்ரு, ஜெய ஸ்தானத்தில் வக்கிரமாக சஞ்சரிக்கும் குரு, முன் ராசிக்குரிய பலன்களை வழங்கிடக் கூடியவர் என்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பிள்ளைகள் நிலையில் முன்னேற்றம் இருக்கும். காதல் விவகாரம் கை கூடும். சிலரை அது திருமணம் வரையில் கொண்டுச் செல்லும் என்றாலும், அவசரப்பட்டு எந்தவித முடிவுகளுக்கும் இந்த நேரத்தில் வரவேண்டாம். செலவுகளையும் திட்டமிட்டுச் செய்வது நன்மையாக இருக்கும். எந்த அளவிற்கு பணம் வருகிறதோ அதற்குள் செலவு செய்வது உங்களுக்கு நன்மையாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்தின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். வெளிநாட்டிற்கு செல்ல முயற்சி செய்தவர்களுக்கு அதற்குரிய வாய்ப்புகள் அமையும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். கலைஞர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். உழைப்பின் நிலைக்கேற்ப பலன்களை அடையும் நிலை உண்டாகும். விவசாயத்தில் லாபம் கூடும். பெண்கள் நிலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். வேலைக்கு முயற்சி செய்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் அக்கறை தேவைப்படும்.
பரிகாரம் ஸ்ரீரங்கநாதரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
திருவோணம்
திட்டமிட்டு செயல்பட்டு வரும் உங்களுக்கு, ராசிநாதன் தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை உயரும். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். தொழில் வளர்ச்சி அடையும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் பாக்யாதிபதி புதன் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் புத்திசாலித்தனமாக செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். வியாபாரத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெரிய நிறுவனங்கள் உங்களைத் தேடிவரும். புதிய தொழில் தொடங்க முயற்சி மேற்கொண்டவர்களுக்கு அதற்குரிய வாய்ப்புகள் அமையும். அரசு வழியில் மேற்கொள்ளும் முயற்சிகள் சாதகமாகும். தைரியமாக செயல்படக்கூடிய நிலை இருக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள், அந்நியரால் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். ஆடை, ஆபரணம் சேரும். பிறருக்கு உதவி செய்யக் கூடிய அளவிற்கு உங்கள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். ஏழரைச் சனியின் கடைசி காலமாக இது இருப்பதால் சனி பகவான் கடந்த காலத்தில் உங்களுக்கு உண்டாக்கிய நெருக்கடிகளில் மாற்றத்தை ஏற்படுத்துவார். புதிய சொத்து, வாகனம், செல்வாக்கு, அந்தஸ்து உண்டாகும். வக்கிர குருவின் நிலையால் வாழ்க்கை வளமாகும். வசதி அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை இருக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். புதிய வீட்டில் பால் காய்ச்சும் நிலை சிலருக்கு உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் அக்கறை தேவைப்படும். உடல் நிலையில் ஏதேனும் சில சங்கடங்கள் அவ்வப்போது வந்து தலைக்காட்டும் என்பதால் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
எடுக்கும் வேலைகளை கவனமாக செய்து வரும் உங்களுக்கு பிறக்கும் தை மாதம் யோகமான மாதமாகும். உங்கள் லாபாதிபதி செவ்வாய் ராசிக்குள் உச்சமாக சஞ்சரிப்பதால் செயல்களில் வேகம் இருக்கும். தடைபட்டு வந்த வேலைகள் முடிவிற்கு வரும். புதிய முயற்சிகள் சாதகமாகும். வேலைக்காக முயற்சி செய்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். பார்த்துவரும் வேலையில் இருந்த பிரச்னைகள் தீரும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். வியாபாரிகளுக்கு வருமானம் உயரும். சுய தொழில் செய்து வருபவர்கள் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். மாதம் முழுவதும் உங்கள் பூர்வ புண்ணியாதிபதியும், ஜீவனாதிபதியுமான சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பண வரவு அதிகரிக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். பொன், பொருள் என்று சேரும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். புதிய வாகனம் வாங்கும் கனவு நனவாகும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். விளைச்சல் செழிக்கும். வருமானம் கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். பெண்களுக்கு மகிழ்ச்சியான நிலை இருக்கும். மாணவர்கள் நட்பு விவகாரங்களை ஒதுக்கி வைத்து படிப்பில் கவனம் செலுத்துவதால் எதிர்பார்த்த மதிப்பெண் பெற முடியும்.