பிறரை வழிநடத்தும் ஞானம் கொண்ட உங்களுக்கு பிறக்கும் தை மாதம் முன்னேற்றமான மாதமாகும். உங்கள் ராசிநாதன் குரு சுகஸ்தானத்தில் வக்கிரம் அடைந்திருந்தாலும் உங்கள் நிலையிலிருக்கும் சங்கடங்களை விலக்குவார். தெய்வ அருளும் பெரிய மனிதர்கள் துணையும் இந்த நேரத்தில் கிடைக்கும். செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். தேவையான பணம் வந்து கொண்டிருக்கும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை உருவாகும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். உங்கள் சப்தமாதிபதி புதன் ஜன. 29 வரை சாதகமாக சஞ்சரிப்பதால் வேலைப் பார்க்கும் இடத்தில் நிம்மதி இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு உண்டாகும். வியாபாரிகளுக்கு புதிய முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். பண வரவு திருப்தி தரும். வெளியூர் பயணத்தில் ஆதாயம் கிடைக்கும். உடலில் இருந்த நோய், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் ஒவ்வொன்றாக விலக ஆரம்பிக்கும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை இருக்கும். அரசியல்வாதிகள் நிலை உயரும். கலைஞர்கள் திறமை வெளிப்படும். விவசாயிகளுக்கு இருந்த நெருக்கடி விலகி எதிர்பார்த்த வரவு வரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை உண்டாகும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். கணவன் மனைவி உறவில் சுமூகம் இருக்கும்.
சந்திராஷ்டமம்: பிப். 7.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 21, 30., பிப். 3, 12.
பரிகாரம்: மகாலிங்கேஸ்வரரை வழிபட தடைகள் விலகும்.
உத்திரட்டாதி
எடுத்த வேலையை உடனடியாக முடிக்க வேண்டும் என்று நினைக்கும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் யோகமான மாதமாகும். சூரியன், செவ்வாய், கேது, சுக்கிரன், புதன் என்று கிரகங்களின் சஞ்சார நிலைகள் இந்த மாதம் சாதகமாக இருப்பதால் கடந்த மாதங்களில் ஏற்பட்ட நெருக்கடிகள், பிரச்னைகள் உங்களை விட்டு விலகும். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் இருந்த இடம் தெரியாமல் போகும். உடல்நிலையும் மனநிலையும் சீராகும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனும், செவ்வாயும் வரவை அதிகரிப்பர். நஷ்டத்தில் இயங்கிய தொழில்களும் இப்போது லாபம் காண ஆரம்பிக்கும். வரவேண்டிய பணம் வரும். திருமண வயதினருக்கு திருமணம் நடந்தேறும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கும், பிரிந்தவர்களுக்கும் மறுமணத்திற்குரிய வாய்ப்புகள் உருவாகும். கருத்து வேறுபாட்டினால் உங்களை விட்டு விலகிச்சென்றவர்கள் மீண்டும் உங்களைத்தேடி வருவர். உங்கள் தைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். நட்புகளால் நன்மைகள் கூடும். மாதம் முழுவதும் அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் நடை உடை எல்லாம் மாறும். முகத்தில் மகிழ்ச்சி தெரியும். பொன், பொருள், புதிய வாகனம் என்று சிலருக்கு சேரும் என்றாலும், விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியும் ராகுவும் செலவுகளை உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள். புதிய இடம் வாங்குவது, வீடு கட்டுவது, அத்தியாவசியமான செலவுகள் என்று கையிருப்பு கரையும். இல்லையெனில் கடன் வாங்கியாவது செலவு செய்யும் நிலை ஏற்படும். விவசாயிகளுக்கு இந்த மாதம் யோகமான மாதமாக இருப்பதால் விளைச்சலில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் அக்கறை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை இருக்கும். அரசியல், பொதுவாழ்வில் இருப்போரின் செல்வாக்கு உயரும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கவும், வெளிநாடு செல்லவும் அரசிடம் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும்.
முயற்சியால் முன்னேற்றம் அடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் அதிர்ஷ்டமான மாதமாகும். ஜன. 29 வரை புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். கலைஞர்கள் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். கல்வியாளர் நிலை உயரும். குடும்பத்தில் நிம்மதியான சூழல் இருக்கும். கேட்ட இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனும், செவ்வாயும் உங்கள் செல்வாக்கையும் அந்தஸ்தையும் உயர்த்துவர். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவுடன் புதிய பொறுப்பும் வரும். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்னைகளில் முடிவு உண்டாகும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். இழுபறியாக இருந்த வழக்கு, விவகாரங்கள் சாதகமாகும். மாதம் முழுவதும் வருமானத்துடன் வசதியாக வாழ்ந்திடும் நிலை இருக்கும். ஆனாலும் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கர்மக் காரகனும், யோகக் காரகனும் உங்கள் ஆசைகள் பூர்த்தியாக செலவுகளை உண்டாக்குவர். சேமிப்பு கரையும். சிலருடைய குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். சொந்த வீட்டில் பால் காய்ச்சுவீர்கள். கணவன், மனைவிக்குள் இணக்கமான நிலை இருக்கும். விவசாயத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். மாணவர்களுக்கு மனதில் தெளிவு இருக்கும் படிப்பில் அக்கறை கூடும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். விற்பனையும் வருமானமும் உயரும்.
சந்திராஷ்டமம்: பிப். 9.
அதிர்ஷட நாள்: ஜன. 21, 23, 30., பிப். 3, 5.
பரிகாரம்: உலகளந்த பெருமாளை வழிபட வாழ்வில் உயர்வு உண்டாகும்.
மேலும்
தை ராசி பலன் (15.1.2026 முதல் 12.2.2026 வரை) »