Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகரம் : பங்குனி ராசி பலன் மீனம் : பங்குனி ராசி பலன் மீனம் : பங்குனி ராசி பலன்
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் ((14.4.2026 முதல் 14.5.2026 வரை)
கும்பம் : பங்குனி ராசி பலன்
எழுத்தின் அளவு:
கும்பம் : பங்குனி ராசி பலன்

பதிவு செய்த நாள்

13 மார்
2026
11:03

அவிட்டம் 3, 4 ம் பாதம்


நினைத்ததை அடைவதற்காக தொடர்ந்து போராடி வரும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் யோகமான மாதமாகும். ராசியை விட்டு சனி பகவான் விலகி இருப்பதால் முயற்சியில் இருந்த தடைகள் விலகும். மந்தமான நிலை மாறும். ஜென்ம ராசிக்குள் ஏப். 1 வரை செவ்வாய் சஞ்சரிப்பதால் துணிச்சலாக செயல்படுவீர்கள். இதுவரை உங்களுக்கு நெருக்கடியை உண்டாக்கி வந்த பிரச்னைகள் விலகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை ராசிக்கு கிடைப்பதால் குரு மங்கள யோகம் உங்கள் செல்வாக்கை உயர்த்தும். திருமண வயதினருக்கு வரன் வரும். குழந்தைக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். முதலீட்டிற்கேற்ற லாபம் உண்டாகும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். அரசியல் வாதிகளின் நீண்டநாள் கனவு நனவாகும். சிலருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். சுதந்திரமாக செயல்படக்கூடிய நிலை உருவாகும். பெண்களுக்கு குடும்பத்தில் மரியாதையும் பொறுப்பும் கூடும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் இருக்கும். உயர்கல்விக்குரிய வாய்ப்பு உருவாகும்.

சந்திராஷ்டமம்: மார்ச் 31, ஏப். 1

அதிர்ஷ்ட நாள்: மார்ச் 17, 18, 26, 27. ஏப். 8, 9.


பரிகாரம்: பைரவரை வழிபட சங்கடங்கள் விலகும். வேண்டுதல் நிறைவேறும்.


சதயம்


வாழ்வில் உச்சத்தை எட்டிவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் யோகமான மாதமாகும். ராசிக்குள் சஞ்சரித்து வந்த சனி பகவான் இரண்டாம் இடத்திற்கு சென்று விட்டதால் முன்பு போன்ற நெருக்கடிகள் இப்போது இருக்காது. வேகமாக செயல்பட்டு விரும்பியதை அடைந்து விடவேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். இந்த நேரத்தில் பாக்ய ஸ்தானம் பலமடைவதால் கடந்த கால நெருக்கடிகள் விலகும். ஞானக்காரகன் குருவின் பார்வை ராசிக்கு கிடைப்பதால் உங்கள் அந்தஸ்து உயரும். எந்த ஒன்றிலும் போராட்டமாக இருந்த நிலை மாறும். பெரியோரின் ஆதரவும், தெய்வ அருளும் கிடைக்கும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றமான நிலை உண்டாகும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை உண்டாகும். பொன், பொருள் சேரும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் முடியும். சப்தம ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் புதிய நட்புகளிடம் எச்சரிக்கை அவசியம். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வது நன்மையாகும். பணியிடத்தில் உங்கள் குடும்ப ரகசியங்களை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம். பெண்களுக்கு இந்த மாதம் யோகமான மாதமாக இருக்கும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட சங்கடம் முடிவிற்கு வரும். முதியவர்கள் கடந்த காலங்களில் அனுபவித்து வந்த சங்கடங்கள் மாறும். உடல்நிலை சீராகும். ஆரோக்கியமாக நடைபோட முடியும். விவசாயிகளுக்கு மனதில் நிம்மதி உண்டாகும். மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: ஏப். 1, 2.

அதிர்ஷ்ட நாள்: மார்ச் 17, 22, 26. ஏப். 4, 8, 13.


பரிகாரம்: விஷ்ணு துர்கையை வழிபட வாழ்வில் வளமும் நலமும் உண்டாகும்.


பூரட்டாதி 1, 2, 3 ம் பாதம்


மற்றவருடைய வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு பிறக்கும் பங்குனி மாதம் யோகமான மாதமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் உங்கள் ராசியையும் பார்க்கிறார். குரு பார்க்க கோடி புண்ணியம் என்று முன்னோர்கள் சொன்ன வார்த்தை உண்மையாகப் போகிறது. இதுவரை தடைபட்ட வேலைகள் இனி நடந்தேறும். நீண்டநாள் கனவுகள் நனவாகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் லாபம் இல்லை, போட்ட முதலீட்டை திரும்பவும் எடுக்க முடியவில்லை என்று வருந்திக் கொண்டிருந்தவர்கள் மனம் மகிழும் வகையில் இக்காலம் யோகமான காலமாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். சுயதொழில் செய்பவர்களுக்கு விற்பனை உயரும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். நீண்ட காலமாக முயற்சித்தும் திருமணம் முடியாமல் இருந்தவர்களுக்கு தகுதியான வரன் வரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நற்செய்தி கிடைக்கும். பெண்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.

சந்திராஷ்டமம்: ஏப். 2, 3.

அதிர்ஷ்ட நாள்: மார்ச் 17, 21, 26, 30. ஏப். 8, 12.


பரிகாரம்: கோமதி அம்மனை வழிபட குறைகள் விலகும். நினைப்பது நடந்தேறும்...........

 
மேலும் சித்திரை ராசி பலன் ((14.4.2026 முதல் 14.5.2026 வரை) »
temple news
மேஷம்அசுவினிநேர்மையாக வாழ்ந்துவரும் உங்களுக்கு, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் மோட்சக்காரகன் கேது, பூர்வ ... மேலும்
 
temple news
ரிஷபம்கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்எடுத்த வேலைகளை முடிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மிதுனம்மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் சித்திரை ... மேலும்
 
temple news
கடகம்புனர்பூசம் 4 ம் பாதம்எதிலும் தெளிவாக செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்மகம்விடாமுயற்சி செய்பவரான உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் வெற்றி தரும் மாதமாக இருக்கும். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar