பதிவு செய்த நாள்
13
மார்
2026
11:03
உத்திராடம் 2, 3, 4 ம் பாதம்
எந்த ஒன்றுக்காகவும் சோர்ந்துவிடாமல் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் நினைத்ததை சாதிக்கும் மாதமாக இருக்கும். ஆத்ம காரகன் சூரியன் சகாய ஸ்தானத்தில் மாதம் முழுவதும் சஞ்சரிப்பதால் நெருக்கடிகள் விலகும். எதிர்பார்த்த வாய்ப்புகள் தேடிவரும். அரசுவழி முயற்சிகள் வெற்றியாகும். அரசியல் வாதிகளின் செல்வாக்கு உயரும். தலைமையின் ஆதரவு கிடைப்பதுடன் தொண்டர்கள் பலமும் கூடும். சிலருக்கு தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்புக் கிடைக்கும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட சட்டப்பிரச்னைகள் முடிவிற்குவரும். எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். சிலர் புதிய தொழில் தொடங்க முயற்சி மேற்கொள்வீர்கள். அதற்கான அனுமதியும் தேவையான பணமும் கிடைக்கும். பெரியோரின் ஆதரவால் செல்வாக்கு உயரும். ஜீவன ஸ்தானத்திற்கு குருப்பார்வை உண்டாவதால் வேலைக்காக செய்யும் முயற்சி வெற்றியாகும். வியாபாரம் விருத்தியாகும். முடியாது என்று கைவிட்ட வேலைகளையும் மீண்டும் தொடர்ந்து ஆதாயம் அடைவீர்கள். விவசாயிகளுக்கு ஏப்.1 முதல் நம்பிக்கை அதிகரிக்கும். விளைச்சலில் எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும். மாணவர்கள் கவனக்குறைவிற்கு இடம்கொடுக்காமல் படிப்பில் அக்கறை செலுத்துவது நன்மையாகும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 29, 30.
அதிர்ஷ்ட நாள் மார்ச் 17, 19, 26, 28. ஏப். 1, 8, 10.
பரிகாரம்: வீரட்டேஸ்வரரை வழிபட வாழ்வில் இருந்த சங்கடம் நீங்கும்.
உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்று தொடர்ந்து முயற்சித்துவரும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் அதிர்ஷ்டமான மாதமாகும். ஏழரை சனியின் காலம் முடிந்து சகாய ஸ்தானத்தில் உங்கள் ராசிநாதனான சனி பகவான் சஞ்சரிப்பதால் இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்ததுபோல் தோன்றும். இதுவரை போராட்டமாகவே இருந்த நிலை இனி மாறும். தொழிற்சாலைகளில் உற்பத்தி அதிகரிக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்புக் கிடைக்கும். சிறுதொழில் நடத்தி வருபவர்களுக்கு வருமானம் உயரும். அரசியல்வாதிகளுக்கும், பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் இதுநாள்வரை இருந்த போராட்ட நிலைமாறும். எதுவுமே நடக்கவில்லை என்று சங்கடப்பட்டு வந்தவர்களுக்கு நீண்டநாள் கனவு நனவாகும். சகாய ஸ்தானாதிபதி குரு பகவான் 6 ம் இடத்தில் சஞ்சரித்தாலும் அவருடைய பார்வைகள் குடும்பத்தில் நிம்மதியை உண்டாக்கும். பணவரவை அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற வைக்கும். பழைய கடன்களை அடைத்து நிம்மதியைக் காணவைக்கும். விரயச்செலவுகளைக் குறைக்கும், மனதில் நிம்மதியை உண்டாக்கும். வியாபாரம், தொழிலில் ஆதாயத்தை அதிகரிக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட சிக்கல்களும் விலகும். பெண்களுக்கு உடல்நிலை சீராகும். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். மாணவர்கள் மற்ற சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம்.
சந்திராஷ்டமம்: மார்ச் 30, 31.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 17, 20, 26, 29. ஏப். 2, 8, 11.
பரிகாரம்: பர்வத வர்த்தினியை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
எல்லாம் அவன் செயல் என்று வாழ்க்கையை அதன்போக்கில் நடத்திவரும் உங்களுக்கு பிறக்கும் பங்குனி மாதம் முன்னேற்றமான மாதமாகும். உழைப்பதற்கு தயங்காதவரான உங்களுக்கு கடந்த மாதம்வரை எல்லாமே போராட்டமாக இருந்திருக்கும். எடுத்த வேலைகளிலும் இழுபறியான நிலை ஏற்பட்டிருக்கும். எந்த வழியில் போனாலும் அங்கே ஒரு நெருக்கடி ஏற்பட்டிருக்கும். இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற சனிப்பெயர்ச்சியும், மாதம் முழுவதும் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனும், ஏப். 1 முதல் தைரிய காரகனான செவ்வாயும் உங்கள் வாழ்க்கையில் அதிசயக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துவர். நீங்களே நம்ப முடியாத அளவிற்கு வாய்ப்புகள் தேடிவரும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். இதுவரையில் உங்களைக் கண்டும் காணாமல் போனவர்களும் உங்களைத்தேடி வரக்கூடிய நிலை உருவாகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு தகுதிக்குரிய வேலைக்கிடைக்கும். இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். புதிய தொழில் தொடங்குவதற்குரிய வாய்ப்புகள் உருவாகும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். குருப்பார்வைகளால் உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உருவாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். பெண்களின் நிலை உயரும். பிறர் தயவை எதிர்பார்த்து வாழ்ந்து வந்தவர்களுக்கு புதிய நம்பிக்கை உண்டாகும். முதியவர்கள் ஆரோக்கியமாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் அக்கறை செலுத்துவது நன்மையாகும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 31.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 17, 18, 26, 27. ஏப். 8, 9.
பரிகாரம்: ஆறுமுகனை வழிபட உங்கள் வாழ்வில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும்.