Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம் : பங்குனி ராசி பலன் மேஷம்: சித்திரை ராசி பலன் மேஷம்: சித்திரை ராசி பலன்
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் ((14.4.2026 முதல் 14.5.2026 வரை)
மீனம் : பங்குனி ராசி பலன்
எழுத்தின் அளவு:
மீனம் : பங்குனி ராசி பலன்

பதிவு செய்த நாள்

13 மார்
2026
11:03

பூரட்டாதி 4 ம் பாதம்


யோசித்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ராசிக்குள் சனி பகவானும் சூரியனும் சஞ்சரிப்பதால் வேலைபளு கூடும். ஒரு பக்கம் வேக வேகமாக செயல்பட நினைத்தாலும் மறுபக்கம் அதில் ஏதேனும் ஒரு தடை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இந்த நேரத்தில் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசிநாதன் குரு பகவான் 8, 10, 12 ம் இடங்களைப் பார்ப்பதால் உங்களுக்கு எதிராக செயல்படக்கூடியவர்களை கண்டறிவீர்கள். மறைமுகத்தொல்லைகள் விலகும். உங்கள் செல்வாக்கு வெளிப்படும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். தைரியமாக செயல்படக்கூடிய நிலை ஏற்படும். தொழில் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வேலைத்தேடி வருபவர்களுக்கு எதிர்பார்த்த வேலைக் கிடைக்கும். செலவுகள் கட்டுப்படும். விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய்க்கு, குரு பகவானின் பார்வை உண்டாவதால் பிரச்னைகள் தீரும். எடுத்த வேலைகளை வெற்றியாகும். முன்னேற்றப் பாதையில் நடைபோடுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியான நிலை உருவாகும். வரவு அதிகரிக்கும். விவசாயிகள் விளைச்சலில் கூடுதல் அக்கறை எடுப்பது அவசியம். பெண்களுக்கு குடும்பத்திலும் வெளியிலும் நிம்மதியான நிலை உண்டாகும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். பொன் பொருள் சேரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை உண்டாகும்.

சந்திராஷ்டமம்: ஏப். 3.

அதிர்ஷ்ட நாள்: மார்ச் 21, 30. ஏப். 12.


பரிகாரம்: பகவதி அம்மனை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும். சங்கடங்கள் விலகும்.


உத்திரட்டாதி


நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, இதுவரையில் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்த சனிபகவான் தற்பொழுது ராசிக்குள் ஜென்ம சனியாக சஞ்சரிக்கிறார். எனவே உங்களுக்குள் ஒரு மந்தமான நிலை இருக்கும். எந்த ஒன்றிலும் வேகமாக செயல்பட முடியாமல் போகும். பணியிடத்திலும் கடினமான நிலை இருக்கும். என்றாலும் ராசிநாதனின் பார்வைகள் சாதகமாக இருப்பதால் அனைத்தையும் உங்களால் சமாளித்துக் கொள்ள முடியும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் ஆரோக்யமும், ஐஸ்வர்யமும் உண்டாகும். கையில் பணம் புழங்கும். பொன் பொருள் சேரும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். மாதத்தின் பிற்பகுதியில் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் வெளியூர் பயணம் அதிகரிக்கும். அதன் வழியே ஆதாயங்களையும் காண முடியும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். பெண்களுக்கு உடல்நிலையும், மனநிலையும் சீராகும். கணவருடன் ஏற்பட்ட பிரச்னை விலகும். ஆடை, ஆபரணம் சேரும். வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும் என்றாலும் மனதில் ஏதேனும் ஒரு சங்கடம் இருந்து கொண்டே இருக்கும். விவசாயிகளுக்கு விளைச்சலில் கூடுதல் கவனம் தேவைப்படும். ஜென்ம சனிக்காலம் இது என்பதால் அரசியல்வாதிகள் அவசர முடிவுகளை இந்த நேரத்தில் எடுக்க வேண்டாம். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மையாகும்.

சந்திராஷ்டமம்: ஏப். 3, 4.

அதிர்ஷ்ட நாள்: மார்ச் 17, 21, 26, 30. ஏப். 8, 12.


பரிகாரம்: சனீஸ்வரரை வழிபட்டுவர சங்கடங்கள் விலகும்.


ரேவதி


திட்டமிட்டும் செயல்பட்டுவரும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ஏப். 6 வரை புதன் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும், விரய ஸ்தானத்திற்கு குருப்பார்வை உண்டாவதால் செலவுகள் குறையும். மனதில் இருந்த குழப்பம் விலகும். வியாபாரிகளுக்கும், கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். சுயதொழில் செய்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். எந்த வேலையை எடுத்தாலும் அதில் முன்னேற்றமில்லை என்ற நிலைமாறும். ஜீவன ஸ்தானத்திற்கும் குருப்பார்வை உண்டாவதால் வியாபாரம் லாபம் தரும். புதிய முயற்சிகள் சாதகமாகும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். புதிய தொழில் தொடங்க எதிர்பார்த்த அனுமதிகள் கிடைக்கும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கு ஞான மோட்சக்காரகன் கேதுவால் உடல்நிலை சீராகும். எதிர்ப்புகள் விலகும். வம்பு வழக்குகள் சாதகமாகும். எந்தவொரு சங்கடமும் உங்களை நெருங்காமல் போகும். பெண்களுக்கு குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். மாதம் முழுவதும் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் மனம் தெளிவடையும். பொன் பொருள் சேரும். உறவினர் மத்தியில் செல்வாக்குடன் வாழும் நிலை உண்டாகும். ஆசிரியர்களின்  ஆலோசனைகளை மாணவர்கள் ஏற்பது அவசியம்.

சந்திராஷ்டமம்: ஏப். 4, 5.

அதிர்ஷ்ட நாள்: மார்ச் 14, 21, 23, 30. ஏப். 3, 12.


பரிகாரம்: ராமநாத சுவாமியை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மை உண்டாகும்.

 
மேலும் சித்திரை ராசி பலன் ((14.4.2026 முதல் 14.5.2026 வரை) »
temple news
மேஷம்அசுவினிநேர்மையாக வாழ்ந்துவரும் உங்களுக்கு, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் மோட்சக்காரகன் கேது, பூர்வ ... மேலும்
 
temple news
ரிஷபம்கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்எடுத்த வேலைகளை முடிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மிதுனம்மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் சித்திரை ... மேலும்
 
temple news
கடகம்புனர்பூசம் 4 ம் பாதம்எதிலும் தெளிவாக செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்மகம்விடாமுயற்சி செய்பவரான உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் வெற்றி தரும் மாதமாக இருக்கும். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar