பதிவு செய்த நாள்
12
ஜன
2013
12:01
எந்தச் சிரமத்தையும் சமாளித்து வெற்றிக்கனி பறிக்கும் கடகராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் சந்திரன் மாத துவக்கத்தில் உத்திராடம் நட்சத்திரத்தில் தனது பயணத்தை துவக்குகிறார். தம்பி, தங்கைகள் நல்லெண்ணத்துடன் உங்கள் வார்த்தையை மதித்து நடந்துகொள்வர். வீடு, வாகனத்தில் தேவையான வளர்ச்சிப்பணிகளை பின்வரும் காலங்களில் நிறைவேற்றலாம். தாய்வழி உறவினர்களிடம் குடும்பத்தின் பழைய விவகாரம் குறித்து பேசவேண்டாம். புத்திரர் சேர்க்கை, சகவாசத்தினால் மனக்குழப்பமும் செயல்திறனில் பின்தங்குகிற சூழ்நிலையும் இருக்கும். உங்களின் ஆறுதல் வார்த்தையும் உதவியும் அவர்களை புத்துணர்வுடன் செயல்பட வைக்கும். உடல்நலத்தைப் பொறுத்தவரை கெட்ட வழக்கங்கள் இல்லாதவர்கள் திடகாத்திரமாக இருப்பார்கள். எதிரிகளிடம் தேவையற்ற விவாதம் பேசுவதால் வம்பு, வழக்கு, செலவு ஏற்படலாம். கவனம். தம்பதியர் இடையே கருத்து பேதம் வரலாம். நண்பர்களுடனும் இதே நிலையே. தொழிலதிபர்களுக்கு அளவான உற்பத்தி, சுமாரான லாபம் என்கிற நிலைமை இருக்கும். வியாபாரிகள் கூடுதல் முயற்சியினால் விற்பனை இலக்கை ஓரளவு எட்டுவர். லாபமும் குறைவாகவே இருக்கும். பணியாளர்கள் சிறப்பாக செயல்பட்டு, பணிகளை நல்லபடியாக முடிப்பர். சலுகைகள் ஓரளவு கிடைக்கும். குடும்பப் பெண்கள், கணவரின் பணச்சூழ் நிலையை உணர்ந்து செயல்படுவதால் மட்டுமே குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி சீராக இருக்கும். பணிபுரியும் பெண்கள் பணிசார்ந்த நுட்பங்களை அறிந்துகொள்வதில் ஆர்வமுடன் செயல்படுவர். சீரான முறையில் இலக்கு நிறைவேறும். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான உற்பத்தி, சுமாரான பணவரவு பெறுவர். சகதொழில் சார்ந்தவர்களுக்கு தகுதிக்கு மீறிய அளவில் பணப் பொறுப்பு ஏற்க வேண்டாம். அரசியல்வாதிகள் நற்பெயரை பாதுகாத்துக்கொள்வர். விவசாயிகளுக்கு சீரான மகசூல், கால்நடை வளர்ப்பில் ஓரளவு லாபம் உண்டு. மாணவர் களுக்கு படிப்பு பின்தங்கலாம். விளையாட்டு, பொழுதுபோக்கு நேரத்தைக் குறைக்க வேண்டும்.
பரிகாரம்: சிவனை வழிபடுவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
உஷார் நாள்: 14.1.13 காலை 9.16-16.1.13 மதியம் 3.01 மற்றும் 10.2.13 மாலை 4.55-12.2.13 இரவு 10.42.
வெற்றி நாள்: ஜனவரி 31, பிப்ரவரி 1
நிறம்: ரோஸ், மஞ்சள் எண்: 3, 9