பதிவு செய்த நாள்
12
ஜன
2013
12:01
உழைப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட மிதுனராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் புதன் மாத முற்பகுதியில் ராசிக்கு எட்டாம் இடத்தில் அனுகூல நற்பலன் தரும் வகையில் உள்ளார். கேது, சுக்கிரன் தன் பங்கிற்கு சிறப்பான பலன்களை வழங்குவர். இம்மாதம் சர்க்கரைப் பொங்கலாய் இனிக்காவிட்டாலும்,வாழ்வு வெண்பொங்கலாய் சுவைக்கும். தம்பி, தங்கையிடம் கருத்து வேறுபாடு வராத அளவிற்கு நடந்துகொள்வது நல்லது. வீடு, வாகனத்தில் கிடைக்கிற வசதியை பெரிதாக மதித்து நடந்துகொள்வீர்கள். தாய்வழி உறவினர் களின் மனவருத்தம் சரிசெய்கிற வகையில் இதமான வார்த்தைகளால் ஆறுதல் சொல்வீர்கள். புத்திரர்கள் ஆடம்பர நாட்டத்தால் பிடிவாதம் செய்வர். பூர்வசொத்து பராமரிப்பில் நம்பகமானவர் களுக்கு மட்டும் இடம் தருவது நல்லது. உடல்நலம் பரவாயில்லை என்ற அளவில் இருக்கும். நிர்ப்பந்தக் கடனை சரிசெய்ய சொத்தின் பேரில் கடன் பெறுகிற சூழ்நிலை உண்டு. தம்பதியர் குடும்ப சூழ்நிலைகளை உணர்ந்து செயல் படுவதால் மட்டுமே ஒற்றுமை சீராகும். தொழிலதிபர்கள் அதிக கண்காணிப்புடன் செயல்படுவதால் மட்டுமே உற்பத்தி தரமும், இலக்கும் நிறைவேறும். நிர்வாகச் செலவு கூடும். வியாபாரிகள் அளவான விற்பனை, சுமாரான பணவரவு என்ற நிலையை எதிர்கொள்வர். பணியாளர்கள் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்படுவதால் மட்டுமே பணியில் குளறுபடி வராமல் தவிர்க்கலாம். குடும்பப் பெண்கள் கணவரின் பணவரவுக்கேற்ப சிக்கனத்தை மேற்கொள்வர். பணிபுரியும் பெண்கள் அனுபவசாலியிடம் ஆலோசனை @கட்டு பணி இலக்கை நிறைவேற்றுவர். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனையில் குறைவு வராத வகையில் தற்காத்துக் கொள்வர். அரசியல்வாதிகள் தேவையற்ற விவகாரங்களை தவிர்ப்பதால் மட்டுமே இருக்கின்ற நற்பெயரை பாதுகாக்க இயலும். விவசாயிகளுக்கு அளவான மகசூல், கால்நடை வளர்ப்பில் சுமாரான பணவரவு கிடைக்கும். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பதால் மட்டுமே தேர்ச்சி கிடைக்கும்.
பரிகாரம்: துர்க்கையை வழிபடுவதால் நன்மை அதிகரிக்கும்.
உஷார் நாள்: 14.1.13 அதிகாலை 3.30- காலை 9.15, 8.2.13 மதியம் 1.30- 10.2.13 மாலை 4.54.
வெற்றி நாள்: ஜனவரி 28, 29, 30
நிறம்: மஞ்சள், வெள்ளை எண்: 3, 6