* மனவுறுதியுடன் இருந்தால் நினைத்ததை அடையலாம். * இக்கட்டான நேரத்தில் செய்யப்படும் சிறிய உதவிகூட பெரியதாகும். * பிறர் செய்த உதவியை மறக்காதே. ஆனால் அவர்கள் கொடுத்த கஷ்டத்தை மறந்துவிடு. * விடாமுயற்சி, அறிவு இருந்தால் சிறந்து விளங்கலாம். * பணிவாக இருப்பவரின் பெருமை மலையை விட பெரியது. * உன்னிடம் இருப்பதை அறிந்து வாழ். இல்லையென்றால் கஷ்டப்படுவாய். * கோடிப் பொருள் கொடுத்தாலும், ஒழுக்கமானவர் தவறு செய்ய மாட்டார். * விடாமுயற்சி செய்தால் அதற்கேற்ற பலன் நிச்சயம் கிடைக்கும். * பிறருக்கு கெடுதல் நினைக்காதே. மீறினால் அது உன்னிடமே வரும். * குழந்தை புத்திசாலியாக இருந்தால் பெற்றோர் சந்தோஷப்படுவர். * விருந்தினரை விரும்பி வரவேற்கும் வீடு நலம் பெறும். * பிறரிடம் இனிமையாக பேசினால் வறுமை வராது. * ஐம்புலனை அடக்கி வாழ்வது பல பிறவிக்கும் நன்மை தரும். * தவறு இல்லாமல் கல்வி கற்று அதன்படி நடக்க வேண்டும். * கல்வி இப்பிறவிக்கு மட்டுமல்ல, வரப் போகும் பிறவிக்கும் பயன் தரும். * கடவுளை சரண் அடைந்தவருக்கு துன்பம் வராது.