பிறருக்கு பணம் கொடுத்தால் தான் உதவி என நினைக்காதீர்கள். சிறு நன்மை செய்தால் கூட அவனது கருணை கிடைக்கும்.
உதாரணமாக நீங்கள் நடந்து செல்கிறீர்கள். நடப்பதற்கு இடையூறாக கல் ஒன்று கிடக்கிறது. அதை எடுத்து ஓரமாக வையுங்கள். முள் கிடந்தால் அதை அருகிலுள்ள குப்பைத் தொட்டியில் போடுங்கள். இது போல முடிந்ததை செய்தால் போதும். இறையருளால் சிறிய நன்மைக்கும் லாபம் கிடைக்கும். பாவம் போக்கும் சக்தியும் இதற்குண்டு.