Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஹொய்சாள மன்னர்கள் காலத்தில் ... நுாறாண்டு வாழ... நுாறாண்டு வாழ...
முதல் பக்கம் » துளிகள்
7ம் நுாற்றாண்டை சேர்ந்த சிவன் கோவில்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
7ம் நுாற்றாண்டை சேர்ந்த  சிவன் கோவில்

பதிவு செய்த நாள்

14 ஏப்
2026
08:04

கர்நாடகாவில் உள்ள பழமையான நகரங்களில் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள பாதாமியும் ஒன்று. இங்கு ஏராளமான கோவில்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று, ஸ்ரீ நாட்டதாவி நாகநாதா கோவில். இது, ஒரு சிவன் கோவிலாகும். சாளுக்கியர்களால், 7ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது. கோவிலின் முன் கட்டப்பட்டுள்ள நுழைவு வாயில் பக்தர்களை அன்புடன் வரவேற்கிறது. கோவிலின் கட்டடம், இன்றும் உறுதியாக இருக்கிறது. இது, பார்ப்பதற்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

இந்த கோவிலை சுற்றி மலைகள் உள்ளன. மரங்களுக்கு நடுவே பசுமையான சூழலில் கோவில் அமைந்து உள்ளது. காலை, 6:00 முதல் மாலை 6:00 மணி வரை கோவில் திறந்திருக்கும். மூலவராக நாகநாதர் சிவலிங்க வடிவத்தில் காட்சி அளிக்கிறார். கருவறைக்கு முன் சிறிய அளவிலான நந்தி சிலை உள்ளது. கோவிலின் மேற்சுவற்றில் சிற்பங்கள் பொறிக்கப்பட்டு உள்ளன.

இக்கோவிலில் அமைதியான சூழல் இருப்பதால், பக்தர்கள் தியானம் செய்வதற்கு ஏற்றதாக உள்ளது.கோவிலில் வீடியோ, படங்கள் எடுப்பதற்கு அனுமதி உண்டு. இருப்பினும், சகபக்தர்களுக்கு தொந்தரவு இல்லாமல் வீடியோ எடுக்க வேண்டும்.முன்னொரு காலத்தில், கோவில் இருந்த பகுதியில் பாம்பு தொல்லை அதிகமாக இருந்ததாகவும், அதனாலே, கோவில் அமைக்கப்பட்டு நாகநாதாவை வழிபடுவதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர். கோவிலின் சுற்றுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பல்வெறு கல்வெட்டுகளை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இக்கோவிலின் வெளிப்புறம் பார்ப்பதற்கு சாதாரணமாக தோன்றினாலும், உட்புறத்தில் கலைநயம் மிக்க சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த கோவில் அமைந்துள்ள பகுதி மலைப்பகுதியாக இருப்பதால், பக்தர்கள் தங்களுக்கு வேண்டிய பொருட்களை நகர் பகுதியிலே வாங்கி செல்வது சிறப்பு.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* பொறுமையாக இரு. அதை விட உயர்ந்த பண்பு வேறில்லை. * கடவுளின் பெயரைச் சொல். நல்லதே நடக்கும்.  * உலகம் ... மேலும்
 
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 
temple news

மனிதன் தெய்வமாகலாம் செப்டம்பர் 24,2026

காஞ்சி மஹாபெரியவரிடம் ஒரு பக்தர், ‘‘சுவாமி... பூமியில் மனிதனாக பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி ... மேலும்
 
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar