Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முனிவர்களை காக்க கலகியில் அவதரித்த ... 7ம் நுாற்றாண்டை சேர்ந்த  சிவன் கோவில் 7ம் நுாற்றாண்டை சேர்ந்த சிவன் கோவில்
முதல் பக்கம் » துளிகள்
ஹொய்சாள மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஹிரேநல்லுார் மல்லிகார்ஜுனா கோவில்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஹொய்சாள மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஹிரேநல்லுார் மல்லிகார்ஜுனா கோவில்

பதிவு செய்த நாள்

14 ஏப்
2026
08:04

சிக்கமகளூரு மாவட்டத்தின் கடூர் தாலுகாவில் உள்ளது ஹிரேநல்லுார் கிராமம். இங்கு ஹொய்சாளா மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட மல்லிகார்ஜுனா கோவில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது. கட்டட கலைக்கு எடுத்துக்காட்டாக உள்ள, இக்கோவிலில் உள்ள சிற்பங்கள் பக்தர்களை வெகுவாக கவர்கின்றன.

கட்டட கலையின் நேர்த்தியான சிற்பங்கள், நுணுக்கமான வடிவமைப்புகள், பக்தர்களை மெய்சிலிக்க வைக்கின்றன. கோவிலின் வெளிப்புற சுவர்கள், ஹிந்து புராண காட்சிகளை சித்திகரிக்கும் அழகான சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன.

கோவிலின் பிரதான கருவறையில், கருங்கல்லால் செதுக்கப்பட்ட மல்லிகார்ஜுனா சுவாமி சிலை அமைந்துள்ளது. கோவிலின் மேற்கூரை பகுதியில் தெய்வங்கள், விலங்குகள், வடிவியல் கோலங்களில் நுணுக்கமான சிற்ப கலைகள் உள்ளன.

அமைதிக்கு ஏற்ற இடமாக உள்ள இந்த கோவிலில், மஹா சிவராத்திரி, உகாதி பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.

உள்ளூர் மரபுகள், சடங்குகளை பாதுகாப்பதிலும், மேம்படுத்துவதிலும் கோவில் முக்கிய பங்காற்றுகிறது.

இன்றைய இளம் தலைமுறையினர் மத பாரம்பரியத்தை அறிந்து கொள்ள உதவும், கல்வி தளமாகவும் விளங்குகிறது. பழமையான கோவில் என்பதால், இந்திய தொல்லியல் ஆய்வு துறையினர் பராமரித்து வருகின்றனர். தர்மஸ்தலா மஞ்சுநாதேஸ்வரா கோவில் டிரஸ்ட் சார்பில், கோவில் புனரமைப்பு பணிகளும் நடக்கின்றன. கோவில் நடை தினமும் காலை 8:00 முதல் காலை 11:00 மணி வரையும்; மாலை 6:00 முதல் இரவு 10:00 மணி வரையும் திறந்து இருக்கும்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 
temple news

மனிதன் தெய்வமாகலாம் செப்டம்பர் 24,2026

காஞ்சி மஹாபெரியவரிடம் ஒரு பக்தர், ‘‘சுவாமி... பூமியில் மனிதனாக பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி ... மேலும்
 
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 
temple news
மாண்டியாவில், அழகான மாரம்மா கோவில் அமைந்துள்ளது. இங்கு குடிகொண்டுள்ள மாரம்மா சக்தி வாய்ந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar