பதிவு செய்த நாள்
18
ஜன
2013
11:01
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் வடக்கு மாடவீதியில் உள்ள, ஜெய் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம், இன்று நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி, நேற்று காலை ஆச்சார்ய வர்ணம், பகவத் பிரார்த்தனை, திவ்ய பிரபந்த தொடக்கம், புண்யாஹவாசனம், ம்ருத்ஸஸ்க்ரஹணம், அங்குரார்பணம், வாஸ்து, சாந்தி, மகா சாந்தி திருமஞ்சனம் நடந்தது.இன்று காலை 7:00 மணிக்கு, விஸ்வரூபம், புண்யாஹவாசனம், கும்ப திருவாராதனம், அக்னிப்ரணயனம், உத்தஹோமம், கும்ப புறப்பாடு நடைபெறும். காலை 9:00 மணியிலிருந்து 1:00 மணிக்குள், மகா கும்பாபிஷேகம் நடைபெறும். மாலை 6:00 மணிக்கு பஜனை நடைபெற உள்ளது.