Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி ... திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம் திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சூலக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சூலக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

21 மே
2026
11:05

பொள்ளாச்சி: சூலக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.


பொள்ளாச்சி அருகே பிரசித்தி பெற்ற சூலக்கல் மாரியம்மன் கோவிலில் திருவிழாவையொட்டி கடந்த, 11ம் தேதி காலை, 9:30 மணிக்கு சூலக்கல் ஆற்றில் இருந்து மூங்கில் கம்பம், கோவிலுக்கு எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. ஆற்றுப்பகுதியில் மூங்கில் மரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, மலரால் அலங்கரித்த மூங்கிலை, மேள, தாள, இசையுடன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, கோவில் வளாகத்தில் மூங்கில், மூன்றாக உடைக்கப்பட்டது. பின்னர், முகூர்த்தக்காய் உடைத்து, உடைக்கப்பட்ட மூங்கில் நவதானியங்கள் உள்ளிட்டவை கட்டி, அம்மனிடம் வைக்கப்பட்டது.


அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கடந்த, 12ம் தேதி காலை, 9:00 மணிக்கு வேல் புறப்பாடு, இரவு, 9:00 மணிக்கு பூச்சாட்டு விழா நடந்தது. கடந்த, 18ம் தேதி இரவு, 9:00 மணிக்கு கிராமசாந்தி, வாஸ்து சாந்தியும், நேற்றுமுன்தினம் இரவு, 7:00 மணிக்கு கம்பம் நாட்டு விழா, பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை,9:00 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஜமீன் சண்முகசுந்தரி வெற்றிவேல் கோப்பண்ண மன்றாடியார், அறங்காவலர் குழு தலைவர் கொற்றவேலு, அறங்காவலர்கள் சுதாகர், பாலசுப்ரமணியம், பழனிசாமி, கோவில் செயல் அலுவலர் சீனிவாச சம்பத் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். இரவு, 8:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. இன்று முதல், 26ம் தேதி வரை தினமும் காலை, மற்றும் இரவு, 8:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா; இரவு, 9:00 மணிக்கு பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 27ம் தேதி காலை, 6:00 மணிக்கு மாவிளக்கு, பொங்கல் வைத்தல், இரவு, 7:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து, 28ம் தேதி மாலை, 4:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 29ம் தேதி மாலை, 4:30 மணிக்கு இரண்டாம் நாள் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், 30ம் தேதி மாலை, 5:00 மணிக்கு மூன்றாம் நாள் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 31ம் தேதி மதியம், 12:00 மணிக்கு மஹா அபி ேஷகமும் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
விஜயவாடா, ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் உள்ள புகழ்பெற்ற கனக துர்கா அம்மன் கோயிலில் தசரா ... மேலும்
 
temple news
மதுரை, அக். 15: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar