Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஆசி பெற்ற ...  விழுப்புரம் அங்காளம்மன் ஊஞ்சல் சேவையில் அருள்பாலிப்பு விழுப்புரம் அங்காளம்மன் ஊஞ்சல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2026
07:06

செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் கொட்டும் மழையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு வைகாசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அன்று காலை அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்கக் காப்பு அலங்காரம் செய்தனர். இரவு 11:20 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது கோவில் பூசாரிகளும் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் அம்மன் தாலாட்டு பாடல்களை பாடினர். பக்தர்கள் கற்பூர தீபமேற்றி வழிபட்டனர். இரவு 12:30 மணிக்கு மகா தீபாரதனையுடன் உற்சவம் நிறைவடைந்தது.

நேற்று மாலை முதல் மேல்மலையனுார் உட்பட விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்த போதும் அதிகளவில் பக்தர்கள் குவிந்திருந்தனர்.விழா ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவலிங்கம், உதவி ஆணையர் சக்திவேல், அறங்காவலர் குழுத் தலைவர் ஏழுமலை மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர். எஸ்.பி., சாய் பிரனீத் மேற்பார்வையில் 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னை, கடலுார், வேலுார் உட்பட பல்வேறு ஊர்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 

 அமைச்சர்கள் சுவாமி தரிசனம்; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமைச்சர்கள் ஆனந்த், தென்னரசு ஆகியோர் சுவாமி தரிசனம் செய்தார்.

த.வெ.க., பொதுச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் ஆனந்த், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் தென்னரசு ஆகியோர் நேற்று முன்தினம் நள்ளிரவு 12:40 மணிக்கு மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலுக்கு வந்தனர். முதலில் மூலவர் அம்மனை தரிசனம் செய்தனர். பின் உற்சவர் அம்மனையும், தியான மேடையில் அமர்ந்தும் வழிபட்டனர். இரவு 1:10 மணியளவில் கோவிலில் இருந்து புறப்பட்டனர். அமைச்சர் தென்னரசு தனி காரில் சென்றார். கோவிலில் இருந்து சிறிது துாரம் நடந்து வந்த அமைச்சர் ஆனந்த் கூட்ட நெரிசல் இருந்ததால் தனது காரில் செல்லாமல் த.வெ.க., நிர்வாகி சிவக்குமாரின் ஸ்கூட்டரில் 5 கி.மீ., துாரம் சென்று அதன் பின்பு அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்னை சென்றார். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar