Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துலாம் : ஆடி ராசி பலன் தனுசு : ஆடி ராசி பலன் தனுசு : ஆடி ராசி பலன்
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
விருச்சிகம் : ஆடி ராசி பலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விருச்சிகம் : ஆடி ராசி பலன்

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2026
11:07

விருச்சிகம்: விசாகம் 4 ம் பாதம்


உயர்ந்த இடத்தை நோக்கி நடைபோட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் வாழ்க்கையை வளமாக்கிவரும் குரு அஸ்தமனம் அடைந்திருப்பதால், இதுவரை உங்களுக்கிருந்த நிலையில் மாற்றம் ஏற்படும். சுலபமாக நடந்து வந்த வேலைகளும் இழுபறியாகும். கைக்கு வந்தது வாய்க்கு வராமல் போனதுபோல் உங்களுக்கு வரும் வாய்ப்புகள் தட்டிக்கொண்டே போகும். நீங்கள் நினைப்பது இந்த நேரத்தில் நடைபெறாமல் போகும். உங்களுக்கு ஆதரவாக இருந்தவர்களும் ஆபத்து அவசரம் என்று போகும்போது கையை விரித்து விடுவார்கள். குடும்பத்திலும் எதிர்பாராத சங்கடங்கள் நெருக்கடிகள் என்பது இருக்கும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் ராசிநாதன் செவ்வாய் தன்னுடைய ஏழாம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால் செயல்களில் வேகம் கூடும். எந்த ஒன்றிலும் நிதானமின்றி செயல்பட்டு அதனால் சங்கடத்திற்கு ஆளாக வேண்டிய நிலை உருவாகும். கணவன் மனைவிக்குள்ளும் ஒற்றுமை என்பது இல்லாமல் போகும். ஆக. 2 முதல் செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் மறைவதால் எடுக்கும் வேலைகளில் நிதானமும் கவனமும் தேவை. பிறரை நம்பி எந்தவொரு வேலையிலும் இந்த நேரத்தில் ஈடுபட வேண்டாம். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சிகளைக் கூட ஒத்தி வைப்பது நன்மையாகும். மனதுக்குள் இனம் புரியாத பயம் இருக்கும் என்பதால் குழப்பமான நிலைத் தொடர்ந்து கொண்டிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரியின் நெருக்கடிக்கு ஆளாக வேண்டிவரும். செய்துவரும் தொழிலும் எதிர்பார்த்த அளவிற்கு கை கொடுக்காமல் போகும். விவசாயிகளுக்கு நெருக்கடியான நிலை உண்டாகும். மாணவர்களுக்கு மாதத்தின் முற்பகுதி யோகமாக இருக்கும்.

சந்திராஷ்டமம்: ஆக. 9.

அதிர்ஷ்ட நாள்: ஜூலை 18, 21, 27, 30. ஆக. 3, 12.


பரிகாரம்: குல தெய்வத்தை வழிபட குறைகள் நீங்கும். நன்மைகள் நடக்கும்.


அனுஷம்


நமக்கு நடப்பதெல்லாம் நாம் செய்த பூர்வ புண்ணிய பலன்களின் விளைவே என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த சனிபகவான் வக்கிரம் அடைந்திருப்பதால் உங்களுக்கிருந்த நெருக்கடிகள் விலகும்.  குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் இருந்த இடம் தெரியாமல் போகும். மனதில் தெளிவு உண்டாகும். பிள்ளைகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்கள் லாபாதிபதியும் அஷ்டமாதிபதியுமான புதன் ஜூலை 31 வரை அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வருமானம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். பொருளாதாரநிலை உயரும். புதிய இடம் வீடு வாங்குவதற்காக எதிர்பார்த்த பணம் கிடைக்கும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் இழுபறியாக இருந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். உறவினர்கள் ஆதரவு அதிகரிக்கும்.  பெண்களுக்கு குடும்பத்தில் பொறுப்பு கூடும். வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். எந்த ஒன்றையும் திட்டமிட்டு செயல்படக் கூடியவர்களாக மாறுவீர்கள். அதனால் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். செல்வாக்கு உயரும். சுக ஸ்தானத்தில் யோக, போக காரகனான ராகு சஞ்சரிப்பதால் மனதில் சஞ்சலம் அதிகரிக்கும். சபலம் ஏற்படும். களத்திரக்காரகன் சுக்கிரன் பத்தாம் இடத்தில் சஞ்சரிப்பதால் கையிருப்பும் கரைய ஆரம்பிக்கும். சம்பாதித்து சேர்த்த பணத்தை தங்களின் சந்தோஷத்திற்காக சிலர் செலவழிப்பீர்கள். வீண் செலவுகளும் அதிகரிக்கும் என்பதால் முடிந்தவரை அனைத்திலும் நிதானமாகவும் கவனமாகவும் செயல்படுவது நன்மையளிக்கும். விவசாயிகளுக்கு உழைப்பிற்கேற்ற ஆதாயம் இல்லை என்ற வருத்தம் ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம்: ஆக. 9, 10.

அதிர்ஷ்ட நாள்: ஜூலை 17, 18, 26, 27. ஆக. 8, 17.


பரிகாரம்: நவகிரகத்தில் உள்ள சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட நன்மை உண்டாகும்.


கேட்டை


வெற்றியின் சூட்சுமங்களை அறிந்த உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ஜூலை 31 வரை புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். வியாபாரம் தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும். வரவேண்டிய பணம் வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். மாமனின் ஆதரவு கூடும். ஆக் 2 முதல் சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நெருக்கடிகள் நீங்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பெரியோரின் ஆதரவு உண்டாகும். உங்கள் ஜீவனாதிபதி சூரியன் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மனதில் இனம் புரியாத குழப்பம், பயம் என்பதெல்லாம் இருக்கும். அதே நேரத்தில் பெரியோரின் ஆதரவும் தக்க சமயத்தில் கிடைக்கும். எல்லாவற்றையும் சரிசெய்து கொள்ளக்கூடிய நிலை உங்களுக்கு ஏற்படும். ஆக. 9 முதல் குரு அஸ்தமனத்தில் இருந்து  நேர்கதியில் சஞ்சரிப்பதால் செல்வம் செல்வாக்கு உயரும். தைரியம் தன்னம்பிக்கை கூடும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். குழந்தைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். மனதில் இருந்த குழப்பங்கள் விலகும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். விவசாயிகளுக்கு நெருக்கடி இருக்கும். மாணவர்கள் ஆசிரியர் ஆலோணனைகளை ஏற்பது நன்மையளிக்கும்.

சந்திராஷ்டமம்: ஆக. 10, 11.

அதிர்ஷ்ட நாள்: ஜூலை 18, 23, 27. ஆக. 5, 9, 14.


பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட சங்கடங்கள் விலகும். வாழ்க்கை வளமாகும்.

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar