Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம் : ஆடி ராசி பலன் மேஷம்: ஆவணி ராசி பலன் மேஷம்: ஆவணி ராசி பலன்
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
மீனம் : ஆடி ராசி பலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மீனம் : ஆடி ராசி பலன்

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2026
11:07

மீனம்: பூரட்டாதி 4 ம் பாதம்


பிறர் நலனில் அக்கறை கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் நன்மையான மாதமாகும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்து வரும் சனி பகவான் வக்கிரம் அடைந்திருப்பதால் இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடிகள், குடும்பத்திலும், தொழிலிலும் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். தடைபட்ட வேலைகள் முடிவிற்குவரும். ஆரோக்கியம் சீராகும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் வைத்தியத்திற்கு கட்டுப்படும். உங்கள் ராசி நாதன் குரு ஆக. 9 வரை அஸ்தமனம் அடைந்திருப்பதால் எடுக்கும் வேலைகளில் கவனம் வேண்டும். வியாபாரம் தொழில் செய்து வருபவர்கள் சந்தை நிலவரத்தை அறிந்து அதற்கேற்ப முதலீடு செய்வது நன்மையாகும். ஆக. 9 முதல் புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம்வரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். நினைத்ததை சாதித்து முடித்திடக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு கூடும். சிலருக்கு திடீர் இடமாற்றம், குடும்பத்தை விட்டு விலகிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட வாய்ப்பிருப்பதால் வேலையில் கவனமாக இருப்பது நன்மையளிக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். மாணவர்களுக்கு மாதத்தின் முற்பகுதி முன்னேற்றமாக இருக்கும்.

சந்திராஷ்டமம்: ஜூலை 21.

அதிர்ஷ்ட நாள்: ஜூலை 30. ஆக. 3, 12.


பரிகாரம்: அபிராமியை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.


உத்திரட்டாதி


எடுக்கும் வேலையில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, இந்த மாதம் நன்மையான மாதமாக இருக்கும். உங்கள் தன குடும்பாதிபதி செவ்வாய் ஆக. 1 வரை சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். ஆரோக்கியம் மேம்படும். சொந்த வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்த சனி வக்கிரம் அடைந்திருப்பதால் ஏழரைச்சனியினால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும் என்றாலும், விரய ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் செலவு அதிகரித்துக் கொண்டிருக்கும். உங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக தாராளமாக செலவுகள் செய்வீர்கள். அதன்வழியே உங்கள் செல்வாக்கும் உயரும். மாதம் முழுவதும் அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சஞ்சாரம் எதிர்மறையாக இருப்பதால் உடல் நிலையில் கவனம் செலுத்தி வருவதுடன் எதிர்பாலினர் விஷயத்திலும் கவனமாக இருப்பது நன்மையளிக்கும். ஆக. 1 முதல் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் புதன் உங்கள் பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதால் பழக்க வழக்கங்களில் எச்சரிக்கையாக இருப்பது நன்மையாகும். தவறானவர்களை ஒதுக்கி வைப்பதும் நன்மை அளிக்கும். அடுத்தவர் விமர்சனத்திற்கு ஆளாகாத வண்ணம் உங்கள் செயல்பாடுகள் இருப்பது அவசியம். பிள்ளைகள் நலனில் அக்கறை ஏற்படும். பெண்களுக்கு புதிய நட்புகளால் சங்கடமும் வெளிவட்டாரத்தில் அவப்பெயரும் குடும்பத்திற்குள் குழப்பமும் ஏற்பட வாய்ப்பிருப்பதால் குடும்பத்தினர. அல்லாதவரிடம் ஓரடி விலகி இருப்பது நன்மையாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பார்க்கும் இடத்தில் தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருப்பது அவசியம். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் வரும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த தடைகள் விலகும்.

சந்திராஷ்டமம்: ஜூலை 22.

அதிர்ஷ்ட நாள்: ஜூலை 17, 21, 26, 30. ஆக. 3, 8, 12, 17.


பரிகாரம்: தர்பாரண்யேஸ்வரரை வழிபட நெருக்கடிகள் நீங்கும். மனதில் இருந்த குழப்பம் விலகும்.


ரேவதி


திட்டம் தீட்டி அதன்படி வெற்றி அடையும் உங்களுக்கு, ஆடி மாதம் யோகமான மாதமாக இருக்கும். ஜூலை 31 வரை வித்யா காரகன் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். எந்த வேலையை எப்படிச்செய்து முடிப்பது என்ற அறிவு ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு தேடிவரும். உறவுகள் வழியில் ஆதாயம் உண்டாகும். ஞான மோட்சக்காரகன் கேது ஆறாம் இடத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் ஆற்றல் வெளிப்படும். எந்த ஒன்றையும் எதிர்கொண்டு வெற்றியடையும் நிலை ஏற்படும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். போட்டி பிரச்சனை வம்பு வழக்கு என்பதெல்லாம் முடிவிற்கு வரும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும் என்றாலும், ஆத்ம காரகன் சூரியன் ஐந்தாம் இடத்தில் சஞ்சரிப்பதால் உடல்நிலையில் சின்னச் சின்ன சங்கடங்கள் வந்து போகும். சிலருக்கு திடீர் பயணம் ஏற்படும். சுய தொழில் செய்து வருபவர்கள் வியாபார வளர்ச்சிக்காக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். சிலருக்கு வெளிநாடு சென்று வரக்கூடிய வாய்ப்பும் வரும். வெளிநாட்டில் வசித்து வருபவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். சிலருக்கு நீண்டநாள் கனவு நனவாகும். நிரந்தர குடியுரிமை கிடைக்கும். பெண்களுக்கு தைரியம் கூடும். உடல்நிலை சீராகும். புத்திசாலித்தனமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்துக்கொள்ள முடியும். விவசாயிகளுக்கு இந்த மாதம் யோகமானதாக இருக்கும். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆலோசனைக் கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: ஜூலை 23.

அதிர்ஷ்ட நாள்: ஜூலை 21, 30. ஆக. 3, 5, 12, 14.


பரிகாரம்: ஆதி திருவரங்கனை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar