Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தனுசு: புரட்டாசி மாத ராசிபலன் கும்பம்: புரட்டாசி மாத ராசிபலன் கும்பம்: புரட்டாசி மாத ராசிபலன்
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
மகரம்: புரட்டாசி மாத ராசிபலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 செப்
2026
04:09

உத்திராடம் 2, 3, 4 ம் பாதம்: விவேகத்துடன் செயல்படும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி நன்மையான மாதமாகும். கடந்த மாதத்தில் ஏற்பட்ட நெருக்கடி நிலை நீங்கும். ஆத்ம காரகன் சூரியன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல் மாற்றம் உண்டாகும் என்றாலும் திட்டமிட்டு செயல்படுவது நன்மையளிக்கும். பெரியோரின் ஆதரவு உங்களைப் பாதுகாக்கும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவும் சிலருக்கு புதிய பொறுப்பும் கிடைக்கும். செப்.23 முதல் புதனும், அக்.9 முதல் சுக்கிரனும் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன், பொருள் சேரும். பணப்பழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். செல்வாக்கு உயரும். அரசுவழி முயற்சிகளில் ஆதாயம் உண்டாகும். இக்காலத்தில் குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல், வீண் பயத்திற்கு ஆட்படாமல் எடுத்த வேலையை நடத்துவதில் கவனம் செலுத்துவது அவசியம். ராசிநாதன் வக்கிரமாக சஞ்சரிப்பதால் அவர் வழங்கும் பலன்கள் உக்கிரமாகவே இருக்கும். வழக்கத்தை விட வேகமாக செயல்படுவீர்கள். எந்த ஒன்றையும் எடுத்தவுடன் முடிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குள் இருக்கும். அதே போல் முடிக்கவும் செய்வீர்கள். தனக்காரகன் குருவின் பார்வையும் சகாய ஸ்தானத்திற்கு கிடைப்பதால் உங்கள் செயல்களில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு வரன் தேடி வரும். வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். பெண்களுக்கு குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். விவசாயிகளுக்கு கடந்த மாதத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். மாணவர்களுக்கு ஆசிரியர் ஆலோசனை நன்மை தரும்.


சந்திராஷ்டமம்: அக். 7

அதிர்ஷ்ட நாள்: செப். 19, 26, 28. அக். 1, 8, 10, 17

பரிகாரம்: கபாலீஸ்வரரையும் கற்பகாம்பாளையும் வழிபட சங்கடங்கள் விலகும்.


திருவோணம்: வாழ்வில் முன்னேற்றத்தை எட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் வாழும் உங்களுக்கு, புரட்டாசி யோகமான மாதமாகும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் உங்கள் செல்வாக்கையும் அந்தஸ்தையும் உயர்த்துவார். எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வார். பட்டம், பதவி, கவுரவம் வழங்குவார். தொழிலில் லாபத்தை காணச் செய்வார். வர வேண்டிய பணம் வரும். சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் வேகமும் இருக்கும். கடந்த மாதத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும் என்றாலும், ஞான மோட்சக்காரகன் கேது அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும், அக்.9 வரை சுக்கிரன் பத்தாம் இடத்தில் சஞ்சரிப்பதும் எதிர்பாராத சங்கடங்களையும் நெருக்கடிகளையும் ஏற்படுத்தும். வீண் செலவுகளை அதிகரிக்கும். சிலருக்கு உடல் நிலையில் ஏதேனும் பிரச்னையை கொண்டு வரும். அந்நியரால் குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். சிலருக்கு வம்பு வழக்கு என்ற நிலையும் உண்டாகும். தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும் வரவை தக்க வைத்துக் கொள்வதும். பண விவகாரத்தில் எச்சரிக்கையாக இருப்பதும் உங்களுக்கு நன்மையளிக்கும். புதிய முயற்சிகளிலும் நிதானம் அவசியம். பெண்களுக்கு இந்த மாதம் யோகமாக இருக்கும் என்றாலும் மாங்கல்ய ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் கணவரின் உடல்நிலையில் அக்கறை செலுத்துவது அவசியம். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். வித்யாகாரகன் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் மாணவர்களுக்கு படிப்பில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.


சந்திராஷ்டமம்: அக். 7, 8

அதிர்ஷ்ட நாள்: செப். 20, 26, 29. அக். 2, 11, 17

பரிகாரம்: வீரராகவ பெருமாளை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.


அவிட்டம் 3, 4 ம் பாதம்: தைரியமும் நெஞ்சுறுதியும் கொண்ட உங்களுக்கு, புரட்டாசி கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். மாதத்தின் தொடக்கத்தில் சத்துரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவார். எதிர்ப்புகளை இல்லாமல் செய்வார். வழக்கில் வெற்றியை உண்டாக்குவார். செப்.20 முதல் சப்தம ஸ்தானத்தில் நீச்சமாக சஞ்சரிக்கும் செவ்வாயால் இந்நிலை மாறும். எந்த ஒன்றிலும் நிதானமாக செயல்பட வேண்டிய நிலை உருவாகும். ராசிநாதன் சனி சகாய ஸ்தானத்தில் வக்கிரம் அடைந்திருப்பதால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். நீண்டநாள் கனவு நனவாகும். உங்களுக்குள் ஒரு அசாத்தியமான துணிச்சல் ஏற்படும். அக்.9 வரை சுக்கிரன் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வியாபாரத்திற்காக செய்யும் முதலீட்டில் தேக்கம் உண்டாகும். ஆடம்பரத்திற்காகவும் ஆசைக்காகவும் செலவுகள் செய்து கையிருப்பு கரையும். சிலர் புதிய வாகனம் நவீன பொருட்கள் வாங்குவீர்கள். உங்கள் பாக்கியாதிபதி புதன் செப்.23 முதல் சாதகமாக சஞ்சரிப்பதால் உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். வர வேண்டிய பணம் வரும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். பெண்களுக்கு கடந்த மாதம் ஏற்பட்ட நெருக்கடி விலகும். குடும்பத்தில் பெரியோரின் ஆதரவு கிடைக்கும். உடல்நிலை சீராகும். விவசாயிகளுக்கு புரட்டாசி மாதம் ஆதாயமான மாதமாகும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் ஏற்படும்.


சந்திராஷ்டமம்: அக். 8, 9

அதிர்ஷ்ட நாள்: செப். 18, 26, 27. அக். 17

பரிகாரம்: சுப்ரமணியரை வழிபட சங்கடங்கள் விலகும்.

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
உத்திரம் 2, 3, 4 ம் பாதம்: நினைத்ததை சாதிப்பதில் வல்லவரான உங்களுக்கு பிறக்கும் புரட்டாசி மாதம் கவனமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar