Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருச்சிகம்: புரட்டாசி மாத ராசிபலன் மகரம்: புரட்டாசி மாத ராசிபலன் மகரம்: புரட்டாசி மாத ராசிபலன்
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
தனுசு: புரட்டாசி மாத ராசிபலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 செப்
2026
04:09

மூலம்: சிந்தித்து செயல்படும் உங்களுக்கு பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதம். ஞான மோட்சக்காரகன் கேது பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தந்தையின் சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். தந்தை வழி உறவுகள் ஆதரவு கிடைக்கும். சகாய ஸ்தானத்தில் யோகக்காரகன் ராகு சஞ்சரிப்பதால் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். எந்த வேலையையும் எடுத்து முடிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். மற்றவரால் முடிக்க முடியாத வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். கடந்த மாதத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். உங்கள் ஜீவன ஸ்தானாதிபதி புதன் மாதம் முழுவதும் சஞ்சரிப்பதால் வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர்கள். பணியாளர்களுக்கு நிம்மதி உண்டாகும். ராசிநாதன் குரு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும், சனி பகவான் அர்த்தாஷ்டமத்தில் வக்கிரம் அடைந்திருப்பதும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சங்கடங்களை உண்டாக்கும் என்றாலும் குருவின் பார்வை மூன்றும் உங்களுக்கு யோகத்தை உண்டாக்கும். மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். எண்ணத்தில் தெளிவும் குடும்பத்தில் நிம்மதியும் இருக்கும். விவசாயிகளுக்கு எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் என்றாலும் கவனமாக செயல்படுவது அவசியம். மாணவர்களுக்கு படிப்பில் ஏற்பட்ட தடைகள் விலகும்.


சந்திராஷ்டமம்: அக். 4, 5

அதிர்ஷ்ட நாள்: செப். 21, 25, 30. அக். 3, 7, 12, 16

பரிகாரம்: பைரவரை வழிபட சங்கடங்கள் விலகி நன்மை உண்டாகும்.


பூராடம்: முயற்சியால் முன்னேற்றம் அடைந்து வரும் உங்களுக்கு, புரட்டாசி மாதம் யோகமான மாதமாகும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் பொருளாதார நெருக்கடி விலகும். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம், போராட்டம் விலகும். உங்கள் பூர்வ புண்ணியாதிபதியான செவ்வாய் செப். 20 முதல் அஷ்டம ஸ்தானத்தில் நீச்சம் அடைவதால் உடல்நிலையில் பின்னடைவு ஏற்படும். எந்த ஒன்றிலும் வேகமாக செயல்படக்கூடிய உங்கள் இயல்பு மாறும்.  உறவினர்களுக்கும், உங்களுக்கும் இடைவெளி ஏற்படும். பிள்ளைகள் பற்றிய கவலை அதிகரிக்கும். பெண்கள் தங்கள் கணவரின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வது நல்லது. சிலருக்கு மனரீதியாக குழப்பம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் திட்டமிட்டு செயல்படுவது அவசியம். சுக ஸ்தானத்தில் உங்கள் குடும்பாதிபதியும், சகாய ஸ்தானாதிபதியுமான சனி வக்கிரமாக சஞ்சரிப்பதால் அவரால் ஏற்பட்ட சங்கடம் விலக ஆரம்பிக்கும். வேலையில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும். பெண்களுக்கு மனதில் இருந்த போராட்டம் விலகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். எண்ணம் பூர்த்தியாகும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தின் பொறுப்பு கைக்கு வரும். விவசாயிகளுக்கு அனைத்திலும் நிதானம் தேவை. யோசிக்காமல் எந்த ஒரு வேலையிலும் இந்த நேரத்தில் ஈடுபட வேண்டாம். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும்.


சந்திராஷ்டமம்: அக். 5, 6

அதிர்ஷ்ட நாள்: செப். 21, 24, 30. அக். 3, 12, 15

பரிகாரம்: கோமதி அம்மனை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.


உத்திராடம் 1 ம் பாதம்: லட்சியத்தோடு வாழும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் யோகமான மாதம். பாக்கியாதிபதியான சூரியன் மாதம் முழுவதும் ஜீவன ஸ்தானமான பத்தாம் இடத்தில் சஞ்சரிப்பதால் தொழில் முன்னேற்றம் அடையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். சிலர் வியாபாரத்தை விரிவு செய்வர். வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு புதிய பொறுப்பும் பதவியும் கிடைக்கும்.  ராகுவால் எண்ணம் பூர்த்தியாகும். நினைத்ததை சாதித்து முடிப்பீர்கள். ராசிநாதன் குருவின் பார்வைகள் 12, 2, 4 ம் இடங்களுக்கு கிடைப்பதால் வீண் செலவு குறையும்.  நிம்மதியான நிலை இருக்கும். துாக்கமின்றி தவித்தவர்களுக்கு நிம்மதியான துாக்கம் வரும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட இடைவெளி நீங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் தீரும்.  கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். உடலில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பெண்களுக்கு நிம்மதியான நிலை உண்டாகும். வாழ்க்கைத் துணையின் உடல்நிலையில் கவனம் தேவை.  தங்கள் ஆரோக்கியத்திலும் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். விவசாயிகள் கால நிலை அறிந்து செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு இந்த மாதம் நன்மையான மாதம்.


சந்திராஷ்டமம்: அக்.6

அதிர்ஷ்ட நாள்: செப். 19, 21, 28, 30. அக். 1, 3, 10, 12

பரிகாரம்: ராமநாத சுவாமியை வழிபட உங்களுக்கிருந்த தடைகள் விலகும். நன்மை உண்டாகும்.

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
உத்திரம் 2, 3, 4 ம் பாதம்: நினைத்ததை சாதிப்பதில் வல்லவரான உங்களுக்கு பிறக்கும் புரட்டாசி மாதம் கவனமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar