Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம்: புரட்டாசி மாத ராசிபலன்
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
மீனம் புரட்டாசி மாத ராசிபலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 செப்
2026
04:09

பூரட்டாதி 4 ம் பாதம்: பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதம். 5ல் ராசிநாதன் குரு உச்சமாக சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த நெருக்கடி, போராட்டம், பிரச்னை, பாதிப்புகள் எல்லாம் விலகும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும்.  இடம், வீடு வாங்க வேண்டும் என்ற கனவோடு இருந்தவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கும். பெரியோரின் ஆதரவும், பணப்புழக்கமும் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். வாழ்க்கைத்துணையை இழந்தவர்களுக்கும் பிரிந்தவர்களுக்கும் மறுமணத்திற்குரிய வாய்ப்பு உருவாகும்.  கேது சத்துரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களுக்கேற்பட்ட எதிர்ப்பு, உடலில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வியாபாரம், தொழிலில் ஆதாயம் அதிகரிக்கும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.  சூரியன் 7ல் சஞ்சரிப்பதால் உத்தியோகத்தில் இருக்கும் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். சிலர் பணியின் காரணமாக வசிக்கும் இடத்தை விட்டு வேறு ஊருக்குச் செல்லும் நிலை உண்டாகும். பெண்களுக்கு இருந்த சங்கடம் விலகும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும். சிலருக்கு காதலித்தவரையே மணமுடிக்கும் நிலை உருவாகும். குடும்பத்தினர் ஆதரவும் கிடைக்கும். நீங்கள் என்ன செய்தாலும் அது சரியாக இருக்கும் என்ற நம்பிக்கை உங்களை சார்ந்தவர்களுக்கு ஏற்படும். செப். 20 முதல் செவ்வாய் நீச்சம் அடைவதால் விவசாயிகள் விளைச்சலில் கவனமாக இருப்பது நல்லது.  மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.


சந்திராஷ்டமம்: அக். 11

அதிர்ஷ்ட நாள்: செப். 21.30. அக். 3, 12

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபட சங்கடங்கள் விலகும்.



உத்திரட்டாதி: பிறக்கும் புரட்டாசி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம். ஜென்ம ராசிக்குள் சனி வக்கிரம் அடைந்து உக்கிர பலன்களை வழங்கிட இருப்பதால் செயலில் நிதானம் தேவை. சிலருக்கு உடல் நிலையிலும் மன நிலையிலும் பாதிப்பு ஏற்படலாம். ஆறாம் இடத்தில் சஞ்சரிக்கும் கேது அவற்றிலிருந்து உங்களை விடுவிப்பார். தைரியமாக உங்களை நடமாட வைப்பார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசிநாதன் குரு, ராசியைப் பார்ப்பதால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனதுபோல் பிரச்னை வந்தாலும் அது உங்களை விட்டு நீங்கி விடும். வியாபாரம், தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பணியாளர்களும் உங்களுக்கு ஒத்துழைப்புடன் இருப்பர். வியாபாரம் வளர்ச்சி பெறும். சேமிப்பு உயரும். புதிய சொத்து, வாகனம் என நீண்ட நாள் கனவு நனவாகும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பாலினரால் ஏற்பட்ட சங்கடம், மன உளைச்சல் மறையும். தெளிவான முடிவுக்கு வந்து எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு கட்டுவீர்கள். பெண்களுக்கு ஏற்பட்ட சங்கடம், பிரச்னை விலகும். வேலை பார்க்கும் இடத்தில் நிம்மதி உருவாகும். குடும்பத்தில் பெரியோரின் ஆதரவு கிடைக்கும். விவசாயிகள் கால நிலை அறிந்து செயல்படுவது நல்லது.  மாணவர்களுக்கு செப்.23 முதல் யோக காலம் என்றே சொல்ல வேண்டும். மனதில் தெளிவு உண்டாகும்.


சந்திராஷ்டமம்: அக். 12

அதிர்ஷ்ட நாள்: செப். 18, 21, 26, 30. அக். 3, 8, 17

பரிகாரம்: சனிக்கிழமையில் நவகிரகத்திற்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்ற நன்மை உண்டாகும்.


ரேவதி: திட்டமிட்டு செயல்படுவதிலும் சுய முன்னேற்றத்திலும் அக்கறை கொண்ட உங்களுக்கு, புரட்டாசி மாதம் நன்மையான மாதம். செப். 23 முதல் வித்யா காரகன் புதன் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மறைந்த புதன் நிறைந்த செல்வத்தைத் தருவார் என்ற வார்த்தைக்கேற்ப வசதி வாய்ப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் இழுபறியாக இருந்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். கையில் பணப்புழக்கம் இருக்கும். கேட்ட இடத்திலிருந்தும் மறுப்பு சொல்லாமல் பணம் கிடைக்கும். இந்த நேரத்தில் குருவின் சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால் வாழ்க்கை வளமாகும். ஆறாம் இடத்து கேது உங்கள் வாழ்க்கையை முன்னேற்றப் பாதையில் நகர்த்திச் செல்வார். உடல்நிலை சீராகும். சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும். வேலை பார்க்கும் இடத்தில் நிம்மதி இருக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். கடந்த மாதத்தை விட புரட்டாசி உங்களுக்கு புதிய பாதையைக் காட்டும் மாதமாக இருக்கும். பொருளாதார நிலையை உயர்த்தும் மாதமாக இருக்கும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். செல்வாக்கு உயரும். விவசாயிகள் அனைத்திலும் கவனமாக இருப்பது நல்லது. செவ்வாய் கடக ராசிக்குள் நீச்சம் அடைவதால் பருவ நிலையால் எதிர்பாராத சங்கடங்களை சந்திக்க நேரிடும். மாணவர்களுக்கு யோகமான மாதமாக இருக்கும். படிப்பில் அக்கறை கூடும்.


சந்திராஷ்டமம்: அக். 13

அதிர்ஷ்ட நாள்: செப். 21, 23, 30. அக். 3, 5, 12, 14

பரிகாரம்: உலகளந்த பெருமாளை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
உத்திரம் 2, 3, 4 ம் பாதம்: நினைத்ததை சாதிப்பதில் வல்லவரான உங்களுக்கு பிறக்கும் புரட்டாசி மாதம் கவனமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar