Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இந்து கடவுள் பெயரில் சினிமா தடை ... பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழமையான கோவிலை புனரமைக்க பொதுமக்கள் முடிவு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 பிப்
2013
12:02

உடுமலை: உடுமலை அருகே பழமை வாய்ந்த கோவிலை பொதுமக்கள் புனரமைக்க திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ள உள்ளனர். இதற்காக வரும் 16ம் தேதி சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது.உடுமலை அருகே கரட்டுமடத்தில், பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சஞ்சீவராய பெருமாள் கோவில் உள்ளது. சுண்ணாம்பு காரையால், கட்டப்பட்ட சஞ்சீவராயர், ஆஞ்சநேயர் சன்னதி மற்றும் மரத்தலான கருட கம்பம் ஆகியவை கோவிலின் சிறப்பம்சமாகும். ஆஞ்சநேய பெருமான் கருடரை தோளில் தாங்கியபடி அழகிய கலையுடன் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

தளி பாளையக்காரர்கள் காலத்தில் கட்டப்பட்டதை குறிப்பிடும் வகையில் கோவிலில் பாளையக்காரர்கள் சிலை உள்ளது. சுற்றுப்பகுதிகளிலுள்ள 50க்கும் அதிகமான கிராமங்களிலிருந்து பார்த்தால் தெரியும் வகையில் மலையில் இடம் தேர்வு செய்யப்பட்டு கோவில் அக்காலத்தில் கட்டப்பட்டுள்ளது.இவ்வாறு, பல சிறப்பம்சங்களையும், பல கிராம மக்களின் வழிபாட்டு நம்பிக்கையையும் இக்கோவிலில் தொடர்ந்து நடந்து வரும் சினிமா ஷூட்டிங்குகள் பாழ்படுத்தப்பட்டது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கோவில் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படவில்லை.இதனால், கோவில் பொலிவிழந்து காணப்பட்டது. நூற்றாண்டை சுமக்கும் கோவில்களை புனரமைக்க எவ்வித நடவடிக்கையுமில்லாததால், பொதுமக்களே கோவிலை புனரைமக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக, கோவில் பிரசன்னம் பார்க்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்த அனுமதி கிடைத்துள்ளதாக கூறும் இப்பகுதி மக்கள் முதற்கட்டமாக கோவில் வளாகத்தை சமப்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ளனர். பொதுமக்கள் கூறுகையில்," மலைமீது வீற்றிருக்கும் சஞ்சீவராய பெருமாள், அனுமந்தராய பெருமாள் கோவிலின் கோபுரங்கள் சிதிலமடைந்து காணப்படுகிறது. இக்கோவிலை புனரமைத்து திருப்பணிகள் தொடங்கப்பட உள்ளன.தற்போது, கோவிலின் இடத்தை சுத்தம் செய்தல், புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள ஊர் பொதுக்கள் அனைவரும் ஒன்று கூடி முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, வரும் 16ம் தேதி காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம் நடத்தப்பட்டு, இருப்பிடம் சுத்தம் செய்யும் பூஜையும், மாலை 5:00 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து, கோவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது, என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ( ஜூலை 14) அதிகாலை மகா ... மேலும்
 
temple news
சென்னை; ஆதிமூலப் பெருமாள் கோவிலில் திருப்பணி மேற்கொள்ளவதற்காக பாலாலயம் செய்யப்பட்டது. சென்னை, ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று  அதிகாலை மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
மதுரை; முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பின் ... மேலும்
 
temple news
விருதுநகர்; தென்திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar