Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தனுசு : கார்த்திகை ராசி பலன் கும்பம் : கார்த்திகை ராசி பலன் கும்பம் : கார்த்திகை ராசி பலன்
முதல் பக்கம் » கார்த்திகை ராசி பலன் (17.11.2026 - 15.12.2026)
மகரம் : கார்த்திகை ராசி பலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மகரம் : கார்த்திகை ராசி பலன்

பதிவு செய்த நாள்

14 நவ
2026
05:11

மகரம்


உத்திராடம் 2, 3, 4 ம் பாதம்

முயற்சியால் முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் யோகமான மாதமாகும். 11 ம் இடமான லாப ஸ்தானத்தில் ஆத்ம காரகன் சூரியன் சஞ்சரிப்பதால் நெருக்கடிகள் விலகும். வியாபாரம் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வரவேண்டிய பணம் வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். குடும்பத்திலிருந்த நெருக்கடி நீங்கும். அரசுவழி முயற்சிகள் சாதகமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்டநாள் முயற்சி வெற்றியாகும். விரும்பிய இடத்திற்கு மாற்றமும், எதிர்பார்த்த பதவி உயர்வும் கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். தலைமையின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு புதிய பொறுப்பும் பதவியும் கிடைக்கும். உங்கள் லாபாதிபதி செவ்வாயும் சூரியனும் பரிவர்த்தனை பெறுவதால் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடலில் இருந்த சங்கடங்கள் விலகும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை இருக்கும். பெண்களுக்கு உடலில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். வேலையில் நிம்மதியான நிலை உண்டாகும். குடும்பத்தில் மரியாதை அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். விவசாயிகளுக்கு குரு மங்கள யோகத்தின் காரணமாக விளைச்சலில் ஆதாயம் உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் ஏற்பட்ட தடைகள் விலகும்.

சந்திராஷ்டமம்: நவ. 30. டிச. 1.

அதிர்ஷ்ட நாள்: நவ. 17, 19, 26, 28. டிச. 1, 8, 10.


பரிகாரம்: கபாலீஸ்வரரை வழிபட எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.


திருவோணம்

சரியான இலக்கைத் தீர்மானித்து அதைநோக்கி பயணித்துவரும் உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். ஜென்ம ராசிக்குள் ராகு பகவான் சஞ்சரிப்பதால் ஆசைகள் அதிகரிக்கும்.  தொழில் வியாபாரத்தில் ஆதாயத்தை எதிர்நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். செல்வம் செல்வாக்கை எதிர்பார்த்து முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அதேநேரத்தில் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது தவறான நட்புகளை உங்களுக்கு ஏற்படுத்தி உங்களை திசை மாற்றுவார். அதனால் குடும்பத்திலும் கணவன் மனைவிக்குள்ளும் பிரச்னைகள் உண்டாகும். இந்த நேரத்தில் உங்கள் ஜீவனாதிபதி சுக்கிரன் பத்தாமிடத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் பலவகையிலும் செலவுகள் அதிகரிக்கும். சிலர் தங்கள் ஆடம்பரத்திற்காகவும், சந்தோஷத்திற்காகவும் அதிகபட்சமாக செலவுகளை மேற்கொள்வீர்கள் என்றாலும், லாப ஸ்தான சூரியன் வரவை அதிகரிப்பார். வசதி வாய்ப்புகளை நோக்கி உங்களை நடைபோட வைப்பார். அக். 30 முதல் உங்கள் ராசிநாதன் சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடைவதால் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். உங்கள் செல்வாக்கு உயரும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். அரசியல் அரசியல்வாதிகளுக்கு பட்டம் பதவி என்ற கனவு நனவாகும். ஆரோக்கியமாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும். பெண்களுக்கு குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். கணவருடன் இணக்கமான நிலை உண்டாகும் என்றாலும், புதிய நட்புகளிடம் ஓரடி விலகி இருப்பது நன்மையினை உண்டாக்கும். குடும்பத்தினருக்கு தெரியாமல் எந்தவொரு முயற்சியிலும், முதலீட்டுலும் ஈடுபட வேண்டாம். அதனால் சங்கடங்களையே சந்திக்க வேண்டியதாக இருக்கும். விவசாயிகள் விளைச்சலில் கவனமாக இருப்பது நன்மையளிக்கும். மாணவர்களுக்கு இந்த மாதம் யோகமான மாதமாகும்.

சந்திராஷ்டமம்: டிச. 1, 2.

அதிர்ஷ்ட நாள்: நவ. 17, 20, 26, 29. டிச. 8, 11.


பரிகாரம்: துர்க்கையை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.


அவிட்டம் 1, 2 ம் பாதம்

பிறப்பு என்பது வாழ்வதற்காகத்தான் என்பதை உணர்ந்து வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். அஷ்டம ஸ்தானத்தில் தைரிய வீரிய காரகன் செவ்வாயும், தன புத்திரக் காரகன் குருவும் மறைவு பெறுவதால் நெருக்கடி அதிகரிக்கும். உடல் நிலையிலும் மனநிலையிலும் சங்கடங்கள் உண்டாகும். ஆனாலும் உங்கள் பாக்கியாதிபதியான புதன் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் செய்துவரும் தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். மாதத்தின் பிற்பகுதியில் சகாய ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் சனிபகவான் வக்கிர நிவர்த்தி அடைவதால் தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். தைரியமாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும் .தொழில் நிறுவனங்கள் நடத்தி வருபவர்களுக்கு பணியாளர்கள் ஆதரவு கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் சிலருக்கு ஏற்படும் என்றாலும் அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். ஞானமோட்சக் காரகன் கேது சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் புதிய நட்புகளின் வழியே சங்கடங்கள் உண்டாகும். ஜென்ம ராசிக்குள் ராகு சஞ்சரிப்பதால் மனதில் தேவையற்ற சஞ்சலமும் ஆசையும் உண்டாகும். அதன் காரணமாக சிலர் தவறான பாதையில் செல்வதற்கும் வாய்ப்புகள் ஏற்படும் என்பதால், உங்கள் சுய கௌரவத்தையும், குடும்ப கௌரவத்தையும் பாதுகாத்திட நல்லது எது? கெட்டது எது என்பதைத் தெரிந்து கொண்டு செயல்படுவது நன்மை அளிக்கும். வியாபாரம் தொழிலில் வருமானம் அதிகரித்திட வாய்ப்பிருப்பதால் அதை சேமிப்பில் கொண்டு செல்வது, பொன் பொருள், இடம் வீடு வாங்குவது என்பது நன்மையளிக்கும். இக்காலத்தில் குடும்பத்தினரை அனுசரித்துச்செல்வதும் வார்த்தைகளில் நிதானம் காப்பதும் மிக மிக அவசியம். பெண்கள் வாழ்க்கைத்துணையின் உடல் நலனில் கூடுதல் அக்கறை எடுப்பது அவசியம். விரய செலவுகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் கவனமாக இருப்பது நன்மையளிக்கும். தாய்வழி உறவினர்கள் ஆதரவு இந்த நேரத்தில் உங்களைப் பாதுகாக்கும். விவசாயிகளுக்கு விளைச்சலில் கூடுதல் கவனம் தேவைப்படும். மாணவர்களுக்கு படிப்பில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: டிச. 2.

அதிர்ஷ்ட நாள்: நவ. 17, 18, 26, 27. டிச. 8, 9.


பரிகாரம்: கருமாரி அம்மனை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.

பகிர்க copied
 
மேலும் கார்த்திகை ராசி பலன் (17.11.2026 - 15.12.2026) »
temple news
மேஷம்:அசுவினிசூழ்நிலைகளுக்கு ஏற்ப செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் நன்மையான ... மேலும்
 
temple news
ரிஷபம்:கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்உழைப்பால் உயர்வடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் ... மேலும்
 
temple news
மிதுனம்:மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்எடுத்த வேலையை முடிப்பதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை ... மேலும்
 
temple news
கடகம்:புனர்பூசம் 4 ம் பாதம்பிறருக்கு ஆலோசனைக் கூறி வழிநடத்திடக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை ... மேலும்
 
temple news
சிம்மம்:மகம்எந்த நிலையிலும் வாழ்ந்திடக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் யோகமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar